Followers

Monday, September 7, 2015

விவசாய தொழில்


வணக்கம்!
          தற்பொழுது தஞ்சாவூர் பகுதி எல்லாம் பயிர் நடவு செய்யும் நாட்களாக இருக்கின்றன. இந்தியாவில் முதுகெலும்பு என்று சொல்லும் விவசாய தொழில் தான் எனது குடும்ப தொழிலாகவும் இருந்து வந்தது. தற்பொழுது அதில் நான் அதிக அக்கறை காட்டுவதில்லை. விவசாய தொழிலை செய்யவில்லை.

விவசாய தொழிலை எனது தந்தை செய்து வந்தார். அதில் ஏற்பட்ட நஷ்டம் மிகப்பெரிய அளவு. அதனை செய்ய வேண்டாம் என்று நான் ஒதுங்கிவிட்டேன். நஷ்டம் ஏற்பட்டாலும் அதனை செய்யவேண்டும் என்று தந்தை சொன்னார். எனக்கு நன்றாக சோதிடம் தெரிந்த பிறகு அதில் ஈடுபட்டால் என்றும் அதில் முன்னேற்றம் அடையமுடியாது என்பது தெரிந்த பிறகு இனி மேல் அதில் ஈடுபடகூடாது என்று முடிவு செய்து நிறுத்திவிட்டோம். 

சோதிடத்தில் ராகு தசா மற்றும் அஷ்டமசனி ஏழரை சனி போன்ற கெடுதல் தரும் நேரத்தில் எந்த தொழில் செய்தாலும் விவசாயதொழில் மட்டும் செய்யவே செய்யகூடாது.  ஒரு வேலை உங்களுக்கு அடுத்த தொழில் ஒன்று இருந்தால் உங்களுக்கு ஏற்படும் தீமைகளை குறைப்பதற்க்கு விவசாயதொழிலை செய்யலாம்.

விவசாய தொழில் ஒரு நஷ்டதொழில் என்பது விவசாயம் செய்யும் அனைத்து விவசாயிக்கும் புரியும். உங்களுக்கு விவசாய தொழில் நன்றாக வந்துக்கொண்டிருக்கிறது என்றாலும் கூட சோதிடத்தில் கெடுதல் செய்யும் நிலையில் கிரகங்கள் இருக்கும்பொழுது விவசாயதொழில் செய்யவேண்டாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Thirumal said...

ஐயா

இதற்கு நான் மறுப்பு தெரிவிக்கிறேன்.
ஏனெனில் அனைவரும் விவசாயத்தை விட்டால் சோத்துக்கு எங்கே போவது?
அப்போ யார்தான் விவசாயம் செய்வது?
நீங்கள் சொன்ன நஷ்ட தொழில் என்பது உண்மைதான்.
இருந்தாலும் விவசாயத்தை கைவிட சொல்வது சரியல்ல.
மாற்று வழி கூறவும்.

எம்.திருமால்