Followers

Wednesday, September 23, 2015

சித்தர்கள்


ணக்கம்!
          சித்தர்களைப்பற்றி அதிகம் எழுதுங்கள் என்று ஒரு நண்பர் பரிந்துரை செய்தார். சித்தர்களை பற்றி நான் எழுதியிருக்கிறேன். அதிகம் எழுதாமல் இருப்பதற்க்கு பல பிளாக்கில் சித்தர்களை பற்றி பிறர் எழுதிக்கொண்டு இருக்கின்றார்கள். நாம் தனியாக சித்தர்களைப்பற்றி சொல்லவேண்டாம் இருக்கின்றேன்.

சித்தர்களை பற்றி நானும் பெருமையாக கருதுகிறேன். தமிழர்களுக்கு சித்தர்களின் மேல் உள்ள ஈடுபாடு அதிகம் என்பதும் எனக்கு நன்றாக புரிகிறது. சித்தர்கள் சொன்னது அனைத்தும் உண்மை என்ற மாற்றுக்கருத்து எனக்கு கிடையாது. 

சித்தர்கள் வாழ்ந்த காலத்தில் உள்ள மனிதர்களை கணக்கில் கொண்டு அவர்கள் புத்தகங்களை எழுதினார்கள். இன்றைய மனிதன் அதுபோலவா இருக்கின்றான் என்பது சந்தேகமே. நமது உணவு முறையே மாறிவிட்டது. மனிதனின் குணம் அனைத்தும் மாறிவிட்டது. அவர்கள் சொன்னதற்க்கும் நமக்கும் நிறைய வித்தியாசம் வருகின்றது அதனால் நான் சித்தர்கள் சொன்னதை சொல்வதில்லை.

உதாரணத்திற்க்கு ஒன்றை பார்க்கலாம். சித்தர்கள் சொன்னது விந்து விட்டவன் நொந்து சாவான். சித்தர்களின் தாரகமந்திரமாகவே இது இருந்து இருக்கின்றது. பழைய காலத்தில் உள்ள மனிதனின் உடல் அதிக சக்தி வாய்ந்தது. அவர்கள் நாட்கள் முழுவதும் வேலை செய்துக்கொண்டு இருப்பார்கள். நாள் முழுவதும் வேலை செய்த உடல் காமத்தில் ஈடுபட்டால் இருக்கின்ற சக்தி எல்லாம் தீர்ந்து அவன் செத்துவிடுவான் என்று கருதி இந்த பழமொழியை உருவாக்கியுள்ளார்கள்.

இன்றைய மனிதன் காலையில் எழுந்து அலுவலகம் செல்ல வீட்டு படியை காலை எடுத்து வைத்தால் கேப் வந்து அழைத்து செல்லுகின்றது. அலுவலக வாசற்படியை இறங்கினால் அங்கிருந்து செல்ல லிப்டை உபயோகப்படுத்துகிறார்கள். நாள் முழுவதும் கம்யூட்டர் முன்னால் உட்கார்ந்துக்கொண்டு அரைமணி நேரத்திற்க்கு ஒரு முறை விதவிதமான உணவுகளையும் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்க்கு வருகின்றார்கள். நாள் முழுவதும் சக்தி உடலில் தேங்கி உடலை கெடுகிறது. இந்த சக்தியை இவர்கள் வெளியேற்றுவது காமத்தில் மட்டுமே. அதனை தேக்கி வைத்தால் அவன் பைத்தியம் ஆகிவிடுவான். 

விந்து விட்டுவான் நொந்து சாவான் என்ற சித்தர்களின் வாக்கை மாற்றி விந்து விடவில்லை என்றால் பையித்தியம் பிடித்து சாவான் என்று தான் இந்த காலத்தில் எழுதவேண்டும்.இப்படி பல கருத்துக்களை இன்றைய காலத்திற்க்கு தகுந்தமாதிரி மாற்றவேண்டும். 

சித்தர்களின் வழியை பின்பற்றுகிறேன் என்று உடலில் சக்தியை தேக்கி வைக்காதீர்கள். சித்தர்களை புரிந்துக்கொண்டு இந்த காலத்திற்க்கு தகுந்த மாதிரி வாழுங்கள்.

நண்பர்களே முகநூலில் அதிகம் ஷேர் செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

nallur parames said...

Veri nice,nalla velippadaiyana padhivu.