Followers

Sunday, January 10, 2016

பாக்கியஸ்தானம் சொல்லும் கருத்து


ணக்கம்!
          ஒவ்வொருவருக்கும் ஒரு பெரிய பாடமாக அவர்களின் கஷ்டகாலம் இருக்கும். ஒவ்வொரு கஷ்டத்திலும் ஏதோ ஒன்றை கடவுள் புரிய வைக்க இதனை செய்து இருக்கிறார் என்பது புரியும்.

இன்றைக்கு இருக்கும் மக்கள் அவர்களின் உறவினர்களிடம் நான் இப்படி வாழ்கிறேன் அப்படி வாழ்கிறேன் என்று தன்னுடைய வீணான பகட்டு தன்மையை வெளிப்படுத்தி காட்டிக்கொண்டு இருப்பார்கள். ரொம்ப கஷ்டப்பட்டு மேலை வந்தவர்கள் கூட தன்னுடைய கஷ்ட காலத்தை மறந்துவிட்டு பேசுபவர்களாக இருக்கின்றார்கள்.

ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய பாடமாக தன்னுடைய கஷ்டகாலம் இருக்கும் என்பதை சொல்லிருக்கிறேன். இதனை நீங்கள் உங்களை சந்திப்பவர்களிடம் உங்களிடம் உண்மையாக இருப்பவர்களிடம் சொன்னீர்கள் என்றால் உங்களை அறியாமையிலேயே உங்களுக்கு ஏற்படும் தலைகணத்தை குறைப்பதற்க்கு இவர்கள் உதவுவார்கள்.

தங்களுடைய பகட்டை தேவைப்படும்பொழுது மட்டுமே வெளியில் காட்டவேண்டும் ஏன் என்றால் ஒரு சில இடத்தில் இப்படிப்பட்ட பந்தா எடுபடுகிறது. தேவையில்லாத இடத்தில் தயவு செய்து காட்டிவிடாதீர்கள்.

பாக்கியஸ்தானத்தை தற்பொழுது பார்த்துக்கொண்டு வருகிறோம் அதிலும் சொல்லுகின்ற ஒரு கருத்து நீ அமைதியாக இருந்தால் உனக்கு எல்லாம் கிடைத்துவிடும் என்பது தான் அது. நல்லது நடந்தாலும் கெடுதல் நடந்தாலும் பொறுமையாக இருப்பவர்களுக்கு பாக்கியஸ்தானம் என்றும் கைவிடுவதில்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: