வணக்கம் !
நேற்று மாலை திருச்சி மலைக்கோட்டை சென்றேன். மலைக்கோட்டை உச்சிபிள்ளையாரை தரிசனம் செய்த பிறகு தாயுமானவர் மற்றும் மட்டுவார்குழலி அம்மனை தரிசனம் செய்தேன். குழந்தை பேறு இல்லாதவர்கள் தரிசனம் செய்யவேண்டிய கோவில் இது. அடிக்கடி நான் இங்கு சென்று இருந்தாலும் தற்பொழுது கும்பாபிஷேகம் செய்தார்கள். அதன் பிறகு நேற்று தான் சென்றேன். இந்த கோவிலுக்கு சென்றால் நல்ல ஆனந்தம் நமக்கு ஏற்படும்.
பிள்ளையாரை தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து பார்த்தால் ஸ்ரீரங்கம் கோபுரம் தெரியும் அவரையும் அப்படியே தரிசனம்செய்துவிடலாம். என்னுடைய மொபைல் கேமராவில் எடுத்தவை தான் அனைத்து படங்களும். மொபைல் குறைந்த தரத்தில் உள்ளவை தான் அதனால் தான் படங்கள் அந்தளவுக்கு தெரியவில்லை. நேரிடையாக நீங்கள் பார்த்தால் கண்குளிர பார்க்கலாம்.
திருச்சி சென்றால் ஒரு முறை சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment