Followers

Thursday, January 21, 2016

இரு கண்கள்


ணக்கம்!
          பாக்கியஸ்தானத்தில் களத்திரஸ்தானம் சம்பந்தப்படும்பொழுது எப்படி பலனை தரும் என்பதை பார்த்து வருகிறோம். குடும்பஸ்தானம் சம்பந்தப்படும்பொழுது ஒரு கருத்தை சொல்லவேண்டும் என்று நினைத்து இருந்தேன். அப்பொழுது சொல்லமுடியவில்லை இப்பொழுது சொல்லுகிறேன்.

இந்த காலத்தில் சம்பாதிப்பது தான் எல்லாவற்றிலும் மிகப்பெரிய அளவுகோலாக இருக்கின்றது. தனக்கு வரும் மாப்பிள்ளை இப்படி சம்பாதிக்கவேண்டும் வருடத்திற்க்கு இத்தனை லட்சம் சம்பாதிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். எப்படியோ இருந்துவிட்டு செல்லுகிறார்கள்.

ஒரு சிலர் நன்றாக சம்பாதிப்பார்கள் ஆனால் குடும்பத்தை நடத்துவதில் கோட்டை விட்டுவிடுவார்கள். அதாவது ஒழுங்காக நடத்த தெரியாமல் குடும்பம் பாதிக்கப்பட்டுவிடும். வெளியில் சம்பாதிக்கும் அளவுக்கு வீட்டை கவனிக்க தெரியாது. 

பெரிய அளவில் சம்பாதித்த முக்கால்வாசி பேருக்கு அவர்களின் குடும்பத்தை கவனிக்க நேரமில்லை என்று கூட குடும்பம் சரியாக அமையாமல் இருக்கின்றது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையாக சென்றுக்கொண்டு இருப்பார்கள்.

சம்பாதிக்கவும் வேண்டும் அதே நேரத்தில் குடும்பத்தையும் கவனிக்க வேண்டும். இரண்டையும் இருகண்களாக பார்ப்பவர்கள் தான் நல்ல வாழ்க்கையை வாழ்பவர்களாக இருப்பார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: