வணக்கம்!
பாக்கியஸ்தானம் மற்றும் எட்டாவது சம்பந்தப்பற்றை இதுவரை பார்த்த வந்தோம். இப்படிப்பட்ட அமைப்பு இருப்பவர்கள் ஒரு வித சோம்பலில் இருந்துக்கொண்டே இருப்பார்கள்.
பாக்கியஸ்தானம் மற்றும் எட்டாவது வீட்டிற்க்குரிய காரியத்துவம் இருக்கும் விசயத்தை கவனித்தல் மிக சிறந்த பலனை தரும். அதாவது நாம் செய்யும் பரிகாரம் எல்லாம் சிவன் அல்லது அழிக்கும் தெய்வங்களாக பார்த்து பரிகாரம் செய்தாலே போதும்.
ஒரு சில இடத்தில் எமனை வைத்து கூட வழிபாடு நடத்திக்கொண்டு இருக்கின்றனர். அப்படிப்பட்ட கோவிலாக பார்த்து வழிபாட்டை நடத்தும்பொழுது இந்த மாதிரியான பாதிப்புகளில் இருந்து தன்னை காத்துக்கொள்ளலாம்.
உங்களின் ஜாதகத்தை கொண்டு அந்த வீட்டைப்பற்றி முழுமையாக அறிந்துக்கொண்டு அது எந்த கோவில் என்பதை தெரிந்துக்கொண்டு அந்த கோவிலில் பரிகாரம் அல்லது வழிபாட்டை நடத்தி வாருங்கள் போதுமான ஒன்றாக இருக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment