Followers

Tuesday, January 5, 2016

விதியும் மதியும்


ணக்கம்!
                 பாக்கியஸ்தான அதிபதி ஐந்தாவது வீட்டில் அமர்ந்து இருந்தால் புத்திர ஸ்தானம் என்பதால் குழந்தைகள் நன்றாக இருக்கும். ஒரு சிலருக்கு தங்களின் குழந்தைகள் பெயரை எடுத்துக்கொடுப்பார்கள் அல்லவா. அவர்களுக்கு எல்லாம் இந்த மாதிரி பாக்கியம் இருக்கும்.

பாக்கியஸ்தானம் பூர்வபுண்ணியம் இரண்டையும் குறிப்பதால் புதையல் போன்ற சொத்துக்கள் கிடைக்கும். இந்த காலத்தில் புதையல் எல்லாம் கிடைப்பது அரிது. புதையல் போன்ற நிறைய பொருட்கள் இருக்கின்றன அல்லவா அது மாதிரி கிடைக்கலாம்.

நல்ல அறிவு இருக்கும் என்று சொல்லலாம். பொதுவாக இது தான் முக்கால்வாசிபேருக்கு இல்லை என்பதால் வழி தெரியாமல் கஷ்டப்படுகிறார்கள் அல்லவா அதுபோல் இல்லாமல் நல்ல அறிவை பெற்றதால் கூடுதலாக நல்ல பாக்கியமும் இருப்பதால் நினைத்தை நடத்துபவர்களாக இருப்பார்கள்.

இன்றைய காலத்தில் பல பெரும் தலைகளின் வாரிசுகளை பார்த்தால் ஜொலிப்பதில்லை ஏன் என்றால் பெரும் தலைகள் அவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளலாம். அரசியலாக இருந்தாலும் சரி சினிமாக இருந்தாலும் சரி பல பெரும்புள்ளிகளின் வாரிசுகள் உருப்படுவதில்லை. 

அவர்களுக்கு இருந்த பாக்கியம் அவர்களின் வாரிசுகளுக்கு சேரவேண்டும் என்று எந்த பெரிய ஆளும் நினைக்காமல் ஆட்டம் போட்டதால் வந்த வினை இதுவாக இருக்கலாம். எப்படியோ நல்லது செய்தால் தன் வாரிசு காப்பாற்றப்படுகிறது. நல்லது செய்யவில்லை என்றால் வாரிசு ஏதோ பெயருக்கு இருக்கிறது.

பாக்கியமும் பூர்வபுண்ணியமும் யாருக்காவது ஒருத்தருக்கு அமையும். அப்படி அமையபெற்ற ஜாதகர்கள் தானும் வாழ்ந்து தன் பிள்ளையும் வாழ்ந்து ஒரு நல்ல பரம்பரையை உருவாக்குகிறார்கள்.  இவர்களால் பல பேருக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கிறது.

பாக்கியஸ்தானமும் பூர்வபுண்ணியமும் சேர்ந்த அமைப்பு பெறுவது என்பது மிகப்பெரிய யோகம். நமக்கு இப்படி அமையவில்லை என்றால் என்ன செய்வது? எப்படிப்பட்ட யோகத்தையும் நாம் பெறமுடியும் அதற்கு பாக்கியஸ்தானம் சொல்லும் காரத்துவத்தையும் பூர்வபுண்ணியம் சொல்லும் காரத்துவத்தையும் செய்துவந்தால் நமக்கு அந்த யோகம் கிடைக்கும். 

ஒன்று விதியால் வருவது அது இயற்கையாக அமையும் யோகம் அடுத்த ஒன்று  உங்களின் புத்தியால் வருவது. விதி கிடைக்கவில்லை என்றாலும் புத்தியை வைத்து பெற விளையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: