வணக்கம்!
நமது பயணத்திட்டத்தின்படி முன்கூட்டியே அறிவிப்பை வெளியிட்டுவிடுவேன். நான் அறிவித்தப்படி அந்த ஊர்க்கு கண்டிப்பாக சென்றுவிடுவேன். தற்பொழுது கோயம்புத்தூர் சென்று வந்தேன். கோயம்புத்தூர் சென்றது ஒருவருடைய வேலைக்காக சென்றேன்.
ஒவ்வொருவரின் ஊருக்கும் செல்லும்பொழுது அவரின் வேலையை முடித்துவிட்டு ஒய்வு நேரத்தில் நமது நண்பர்களை சந்திப்பது வழக்கம். பல நண்பர்கள் நான் சென்று வந்த பிறகு என்னை தொடர்புக்கொள்கிறார்கள். முன்கூட்டியே என்னிடம் சொல்லிவிட்டால் உங்களை நானே தொடர்புக்கொண்டு சந்தித்துவிடுவேன்.
தற்பொழுது கோயம்புத்தூர் செல்லும்பொழுது கூட சம்பந்தப்பட்ட நபரை தவிர ஒரு நண்பர் மட்டும் தொடர்புக்கொண்டார். அவரை சந்தித்தேன். அந்த ஊரில் இருந்து வந்த பிறகு நமது நண்பர்கள் தொடர்புக்கொள்கிறார்கள். தினமும் பதிவை படிக்காததால் இப்படி நடைபெறுகிறது. முன்கூட்டியே நான் தெரிவித்துவிடுகிறேன். அதேப்போல் நீங்களும் என்னை முன்கூட்டியே தொடர்புக்கொண்டு சொல்லிவிடுங்கள்.
பழனி முருகனை தரிசனம் செய்ய செல்கிறேன். முதல் பயணம் இது. எந்த தேதி என்று இதுவரை முடிவு செய்யவில்லை. பழனி சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்கள் என்னை தொடர்புக்கொள்ளலாம்.
அடுத்தடுத்த பயணம்.
வேதாரண்யம்
ஈரோடு பவானி
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment