வணக்கம்!
பாக்கியஸ்தானம் நன்றாக இல்லை என்றாலும் அந்த நபர் பாக்கியஸ்தானத்திற்க்கு உரிய வேலையை செய்தார் என்றால் அவருக்கு ஒரளவு நல்ல வழியை கிரகங்கள் ஏற்படுத்திக்கொடுத்துவிடும்.
பாக்கியஸ்தானத்தில் உள்ள ஒரு காரத்துவம் ஆலயங்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்வது. ஒரு கோவில் கட்டிக்கொண்டிருந்தால் அந்த கோவிலுக்கு தகுந்த பொருட்களை நம்மால் வாங்கிக்கொடுப்பது போன்ற வேலையை செய்தாலே போதும் நமக்கு பாக்கியஸ்தானம் நல்ல வழியை காட்டிக்கொடுத்துவிடும்.
பெரும்பாலும் நமது நண்பர்களுக்கு பரிகாரம் என்று செய்யும்பொழுது அவர்களுக்கு உதவ நான் பல கோவிலுக்கு இப்படி உதவி செய்துவிடுவது உண்டு. கோவில் கட்டிக்கொண்டிருந்தால் அந்த கோவிலுக்கு தேவையான பொருட்களை வாங்க பணத்தை அல்லது பொருட்களை வாங்கிக்கொடுத்துவிடுவேன்.
இப்படி செய்வது எல்லாம் நான் வழக்கமாக கொண்டிருந்தாலும் அதனைப்பற்றி தகவல்களை வெளியில் சொல்லுவதில்லை. வாடிக்கையாளர்களின் பணத்தை வைத்து செய்வதால் அதனை பதிவில் போடுவதும் கிடையாது.
ஒருவருக்கு இப்படி செய்யும்பொழுது மட்டுமே அவர்களுக்கு நன்மை வழங்க முடியும். நாம் செய்வது அவர்களுக்கு உதவும். இதனை நீங்களும் செய்து பாக்கியஸ்தானத்தை பலப்படுத்திக்கொள்ளலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment