வணக்கம்!
பூர்வபுண்ணியத்தை வைத்து நமது அறிவை சொல்லுவார்கள் ஆனால் நமக்கு கொடுக்கும் அறிவு பாக்கியஸ்தானம். தந்தை அறிவை கற்று தரவேண்டும்.
இன்றைய காலத்தில் பார்த்தால் பல குடும்பங்களில் அதுவும் தந்தையை இறந்த குழந்தையின் வளர்ச்சியை பார்த்தால் அந்தளவுக்கு நன்றாக இருக்காது. தாய் வளர்த்தால் கூட அந்த குழந்தைகள் அந்தளவுக்கு சிறப்பாக செயல்படமாட்டார்கள்.
ஏன் இதனை சொல்லுகிறேன் என்றால் பெண்கள் நடத்தும் குடும்பங்களை பார்த்தால் சிறப்பாக இருப்பது போல் தோன்றும் ஆனால் கடைசியில் ஒன்றும் இல்லாமல் போய்விடும். யாரையும் குறிப்பிட்டு இதனை சொல்லவில்லை. அனுபவத்தில் பார்க்கும்பொழுது இது தெரியவருகிறது.
பாக்கியஸ்தானம் நன்றாக இருந்தால் தந்தை நமக்கு ஒரு அறிவை கொடுத்து நமது வாழ்வு நன்றாக அமைய உதவி புரிவார். பாக்கியஸ்தானம் அடிபடும்பொழுது தந்தை அடிப்பட்டு வீணாக தான் போகவேண்டும்.
பெண்களை பொறுத்தவரை நான் தவறு என்று சொல்லவில்லை. தாய் அன்பை கொடுப்பாள் தந்தை அறிவை கொடுப்பான். தற்பொழுது தந்தையைப்பற்றி பார்ப்பதால் இதனை சொல்லுகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment