Followers

Saturday, January 9, 2016

அனுபவம்


ணக்கம்!
          சோதிடத்தை நம்பாதவர்கள் கூட அமாவாசை மற்றும் பெளர்ணமியை பார்த்து பயப்படதான் செய்வார்கள். அறிவியல் வளர்வதற்க்கு முன்பே இதனை எல்லாம் கண்டிபிடித்து சொன்ன நம்ம ஆட்கள் எவ்வளவு பெரிய ஆள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒரு நாத்திகனாக இருந்தால் கூட ஆன்மீகத்தை நம்புகிற ஒரு விசயத்தை சொல்லுகிறேன்.

எங்கள் ஊரில் இருந்து கடல் பகுதி மிக குறைந்த தூரத்தில் தான் இருக்கின்றது. இருபது கிலோ மீட்டர் தூரத்தில் கடல் பகுதியை அடைந்துவிடலாம். இந்த கடல் பகுதி ஓரத்தில் இறால் பண்ணை அமைத்து இறாலை வளர்க்கிறார்கள். 

இறால் பண்ணை தொழில் என்பது உங்களுக்கு எப்படி ஷேர் மார்க்கெட் ஒரு லாபம் கொடுக்கும் தொழில் என்று நம்புகிறீர்களோ அதேப்போல் இறால் பண்ணையும் ஷேர் மார்க்கெட் மாதிரியான ஒரு தொழில்.

ஷேர்மார்க்கெட்டில் பணத்தை போட்டு லாபம் சம்பாதித்தவர்களும் இருக்கின்றார்கள் அதேப்போல் நஷ்டம் ஏற்பட்டவர்களுக்கும் அதிகம் பேர். நல்ல நேரம் இருந்தால் அரசனைப்போல் மாறுவார்கள் கெட்ட நேரம் இருந்தால் ஆண்டியாக போய்விடுவார்கள்.

இறால் பண்ணை வளர்ப்பவர்களுக்கு தான் தெரியும் இந்த திதி எல்லாம் எப்படி வேலை செய்யும் என்பது. இறால் பண்ணை வளர்ப்பவர்களின் விதியை முடிவு பண்ணுவது இந்த திதி தான். 

பதினைந்து லட்சம் ரூபாய் போட்டால் 120 நாட்களில் ஐம்பது லட்சம் ரூபாய் லாபத்தை பார்க்கும் ஒரே தொழில் இந்த இறால் பண்ணை மட்டுமே. எனக்கு தெரிந்து அதிக பணம் பார்க்கும் தொழில் இதுவாகதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இறால் பண்ணை ஆரம்பித்து இந்த 120 நாட்களில் வருகின்ற அஷ்டமி அமாவாசை திதியை தாண்டி வந்துவிட்டால் அவரை கையில் பிடிக்கமுடியாது. அஷ்டமி திதி அதிபயங்கரமான ஒரு திதியாகவே இவர்கள் கருதுவார்கள்.

இறால் மீன் ஒன்றுக்கு ஒரு நோய் வந்துவிட்டால் அவ்வளவு தான் குளத்தில் இருக்கும் அனைத்து மீனும் இறந்துவிடும். இந்த மீனுக்கு நோய் வராமல் தடுக்க அஷ்டமி திதி இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்து மருந்து போட ஆரம்பித்துவிடுவார்கள். அஷ்டமியை தாண்டிவிட்டால் ஆபத்து இல்லை என்று சொல்லுவார்கள். சாமி கும்பிடாதவனும் இறால் பண்ணை அமைத்தால் அவன் படு பக்திமானாக மாறிவிடுவான்.

உங்களுக்கு இந்த தொழிலை பற்றி தெரிந்து இருந்தால் நான் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை என்பது தெரியும். கோடிக்கணக்கில் விட்டு தெருவிற்க்கு வந்தவர்களும் அதிகம். கோடிக்கணக்கில் சம்பாதித்தவர்களும் இங்கு அதிகம் பேர் இருக்கின்றார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: