Followers

Saturday, January 16, 2016

மாட்டுப்பொங்கலும் பாக்கியஸ்தானமும்


வணக்கம்!
          இந்த பதிவை காலையிலேயே தந்து இருக்கவேண்டும் கொஞ்சம் வேலை இருந்த காரணத்தால் உங்களுக்கு தரமுடியவில்லை. இன்று மாட்டுப்பொங்கல். உங்களுக்கு வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன். கிராமங்களில் மாட்டுப்பொங்கல் தான் விஷேசம்.

மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளுக்கு செய்யும் நிகழ்வு ஒருபுறம் இருந்தாலும் நமது முன்னோர்களுக்கு அவர்களுக்கு பிடித்ததை வைத்து படைப்பது தனி சிறப்பு. அவர்களுக்கு வேஷ்டி சேலை புதியதாக எடுத்து வைத்து படிப்பார்கள். அனைவரும் இதனை செய்யலாம்.

மாட்டுப்பொங்கல் அன்று முன்னோர்களுக்கு படைக்கும்பொழுது தற்பொழுது நாம் பார்த்து வரும் பாக்கியஸ்தானம் நமக்கு நல்லது செய்யும். நகரங்களில் உள்ளவர்கள் இதனை செய்வதில்லை. இதனை படித்துவிட்டாவது செய்யுங்கள். 

இன்று நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். மாலை நேரத்திற்க்குள் நல்லெண்ணெய் உடலில் தேய்த்து குளித்துவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: