Followers

Wednesday, January 6, 2016

பிரேததோஷம்


ணக்கம்!
          ஒன்பதாவது வீட்டில் பாவக்கிரகங்கள் இருந்தால் அது தோஷம் என்று சொல்லிவிடுவார்கள். இதில் பிரேததோஷத்தையும் சேர்த்து சொல்லுவார்கள். அது என்ன பிரேததோஷம் என்றால் இறந்த உடலுக்கு தீங்கு செய்தவர்.

இந்த காலத்தில் இறந்த உடலை தூக்கிக்கொண்டு செல்வதற்க்கே ஆள்கள் கிடையாது. இதில் பிரேதத்திற்க்கு எங்கு சென்று தீங்கு செய்ய போகிறார்கள். இது கிராமபகுதியில் இந்த தோஷம் உண்டு என்று சொல்லலாம்.

கிராமபகுதியில் உள்ளவர்கள் ஒருவர் இறந்துவிட்டால் அவரின் இறுதி சடங்கிற்க்கு பாதையை கொடுக்கமாட்டேன் என்று வம்பு செய்வார்கள்.சுடுகாட்டிற்க்கு பாதை என்பது அடுத்தவன் வயலை தாண்டி தான் போகவேண்டிய நிலை எல்லாம் இன்றும் பல கிராமங்களில் இருக்கின்றது. என் வயலில் நீ எடுத்துச்செல்லகூடாது என்று வம்பு செய்வார்கள். இதனாலும் பிரேததோஷம் ஏற்படலாம். இன்று பல கிராமங்களில் அனைத்து சுடுகாட்டிற்க்கும் சாலை வசதி ஏற்படுத்திக்கொடுத்து இருக்கிறார்கள். ஒரு சில இடத்தில் இல்லாமல் இருக்கலாம்.

நாம் சிறுவர்களாக இருந்த காலத்தில் எல்லாம் சாலை வசதி கிடையாது. அப்பொழுது செய்த இந்த பிரச்சினை தோஷமாக கூட இருக்கலாம்.அதனால் நமக்கு காரியதடை ஏற்படும். இறந்த உடலுக்கு செய்யவேண்டிய காரியத்திற்க்கு தடையாக இருக்ககூடாது. அப்படி தடையை ஏற்படுத்தி இருந்தால் இது தோஷமாக இருக்கும். 

சனிக்கிரகம் அல்லது ராகு கிரகம் ஒன்பதாவது வீட்டில் அமைந்திருந்தால் இந்த மாதிரியான தோஷம் என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: