வணக்கம்!
ஒருவருடைய ஜாதகத்தில் இராஜகுரு என்று சொல்லக்கூடிய குரு கிரகமும் சுக்கிர கிரகமும் அடிப்பட்டால் அவரால் அவ்வளவு எளிதில் வாழ்க்கையில் மேலே வரமுடியாது. மேலே வரமுடியாது என்று சொல்லுவது எதிலும் தோல்வி கிடைக்கும்.
ஒருவர் பிரபலமடைய வேண்டும் என்றால் குரு கிரகம் நன்றாக இருக்க வேண்டும். குரு கிரகம் சரியில்லை என்றால் அவர்க்கு சாபம் வந்து இருக்கின்றது என்று அர்த்தம். அதாவது அவர் பிராமணர்களின் சாபத்தை இந்த பிறவியிலேயே அல்லது முற்பிறவியிலேயே வாங்கியிருக்கவேண்டும்.
உங்களின் தாத்தா அல்லது அதற்கு முற்பட்டவர்கள் இந்த சாபத்தை வாங்கியிருப்பார்கள். உங்களின் குடும்பத்தில் எந்த வித வளர்ச்சியும் இருக்காது. உங்களின் குடும்பத்தில் அதிகமான பேருக்கு தொடர்ச்சியாக ஒரே நோயால் தாக்கப்பட்டு இருப்பார்கள். அதனால் மரணம் கூட வரும். உங்களின் வாரிசுகளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையாது.
குரு இப்படி இருக்கின்றது. அடுத்தப்படியாக சுக்கிரன் கிரகமும் அடிப்பட்டு இருக்கின்றது என்றால் உங்களின் முற்பிறவியில் அல்லது உங்களின் தாத்தா யாராவது ஒரு பெண்ணிற்க்கு துரோகம் செய்திருப்பார்கள் அல்லது பெண்ணை கொலை கூட செய்திருக்கலாம்.
இரண்டு கிரகங்களும் அடிப்பட்டால் உங்களின் ஜாதகமும் கடுமையான சிக்கலில் இருக்கின்றது என்று அர்த்தம் கொள்ளவேண்டும். இதனை சோதிடர்கள் அவ்வளவு எளிதில் சொல்லிவிட மாட்டார்கள். நீங்களே இதனை ஆராய்ந்தால் மட்டுமே உண்டு.
உங்களின் முன்னோர்களின் அறிவுரை தான் இதற்கு முக்கிய பங்கு வகிக்கும். ஏன் என்றால் அவர்கள் இதனை சொன்னால் மட்டுமே உங்களுக்கு முழுவிபரமும் தெரியவரும். உங்கள் அப்பா இதனை செய்தார் உங்களின் தாத்தா இதனை செய்தார் என்று சொல்லுவார்கள்.
சாபநிவர்த்தி என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதனால் சோதிடர்கள் இதனை தவிர்ப்பார்கள். நீங்களே இதனை ஆராய்ந்து அதன் பிறகு இதற்கு பரிகாரம் செய்யவேண்டும். உங்களின் ஜாதகத்தில் இப்படிப்பட்ட பிரச்சினை இருக்கின்றது என்றால் என்னை தொடர்புக்கொண்டு இதற்கு விளக்கம் கேட்டுக்கொள்ளலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment