Followers

Monday, October 9, 2017

தெய்வீக தன்மை


ணக்கம்!
          ஒரு சில பேர்களை பார்த்து இருக்கிறேன். அவர்களிடம் தெய்வஅம்சம் என்பது துளியும் இருக்காது. அதாவது அவர்களிடம் நாம் சென்றால் நமது மனம் பெரிதாக ஈர்க்காது. நமது மனம் தடுமாறும்.

ஏன் இப்படி அவர்களிடம் இருக்கின்றது என்றால் அவர்கள் கோவில் பக்கமே தலைக்காட்டாதா நபர்களாக இருப்பார்கள். அதோடு அவர்களின் வாழ்க்கை முறையும் ஒழுங்காக இருக்காது. இப்படிப்பட்ட நபர்களை நாம் பார்த்தால் நாம் விலகி தான் செல்லவேண்டியிருக்கும்.

எப்பேர்பட்ட சூழ்நிலை உருவாகினாலும் நம்முடைய உள்ளே இருக்கும் அந்த தெய்வம்சம் மட்டும் நம்மிடம் இருந்து வெளியே சென்றுவிடகூடாது என்பதில் மட்டும் அதிக கவனம் செலுத்தினால் இதனை மனிதன் இழந்துவிடமாட்டான்.

ஒரு சில தவறான நபர்களிடம் தொடர்பு வைத்திருந்தாலும் நமது தெய்வீகம் நம்மை விட்டு சென்றுவிடும். பழக்கம் வைத்துக்கொள்வது கூட சரியான நபர் தானா என்பது சோதித்து அவர்களிடம் பழக்கம் வைத்துக்கொள்ளவேண்டும்.

புறஅழகை பார்த்து நாம் பழக்கம் வைத்துக்கொள்ளவேண்டியதில்லை. உள்ளே உள்ள ஆத்மஅழகை பாரத்து நாம் இதனை செய்யவேண்டும். இதனை எப்படி கண்டுக்கொள்வது என்று கேட்கலாம். கொஞ்சநாள்கள் இதனை நீங்கள் பிறமனிதனை பார்க்க ஆரம்பித்தால் அதுவே உங்களை விழிப்படைய வைத்துவிடும்.

இன்று அம்மன் பூஜை. நாளை முதல் பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்பியவர்களை தொடர்புக்கொண்டுவிட்டு பரிகாரபூஜை ஆரம்பம் ஆகும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: