Followers

Wednesday, October 4, 2017

சுக்கிரன்


வணக்கம்!
          சுக்கிரனுக்கு நண்பர்களாக இருக்கும் இடத்தில் சுக்கிரன் அமர்ந்தால் அவர் நல்ல பலனை தருவார் என்பது சோதிட விதி. சுக்கிரனுக்கு மிக மிக முக்கிய நண்பர்கள் என்பவர்கள் சனியும் புதனும் ஆவார்கள்.

சனியின் வீட்டில் அமர்ந்தால் சுக்கிரன் நல்ல பலனை கொடுப்பார். பெரிய கெடுதல் செய்யமாட்டார். புதனின் வீடான கன்னி வீட்டில் சுக்கிரன் அமர்ந்தால் அது நீசமாக அமர்க்கிறார் என்பது உங்களுக்கு தெரியும். 

புதன் நண்பர் வீடாக இருந்தாலும் நீசமாக போய்விடுகிறார். அதாவது மிக மிக முக்கியமான நண்பரின் வீட்டில் பலன் இல்லாமல் போய்விடுகிறார். மிதுனத்தில் அமர்ந்தால் செல்வவளம் குறையாது ஆனால் நோய் தொந்தரவு இருக்கின்றது. 

சுக்கிரனுக்கும் குருவுக்கும் அந்தளவுக்கு ஒத்துவராது என்பார்கள். குருவின் வீட்டில் உச்சமாகிவிடுகிறார். எதிரியின் வீட்டில் பலமாக நான் இருப்பேன் என்று அமர்ந்து பலனையும் கொடுக்கிறார்.

உச்சம் நீசம் வீட்டிற்க்குள் சென்று நட்சத்திரத்தை எல்லாம் கவனித்து பார்த்தால் பல விநோத பலன்கள் எல்லாம் சொல்லலாம். அதனைப்பற்றி எல்லாம் பின்பு பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: