Followers

Sunday, November 19, 2017

உணவு


வணக்கம்!
          சத்துள்ள உணவை பற்றி சொல்லுங்கள் என்று நண்பர் கேட்டுருந்தார். உணவைப்பற்றி நிறைய கருத்துக்கள் பரவலாகவும் ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். உங்களின் உடலுக்கு எது நல்ல சத்தாக இருக்கின்றது என்று நினைக்கின்றீர்களோ அதனை சாப்பிடுங்கள் என்று சொல்லுவேன்.

தற்பொழுது தான் இதனை நானே கருத்தில் கொண்டு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறேன். சோதிடரீதியாக நான் பரிகாரம் செய்கிறேன் என்று சொன்னாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு நல்ல சத்துள்ள உணவை சாப்பிடவேண்டும் என்று சொல்லுவது உண்டு.

சோதிடத்தில் கிரகங்கள் வழியாக பிரச்சினை என்று வருகின்றது என்றால் சம்பந்தப்பட்டவர்கள் சாப்பாட்டில் அந்த கிரகத்திற்க்குரிய உணவை எடுக்கவேண்டும் என்று அந்த காலத்தில் சொல்லிருக்கின்றனர். பூஜையோடு சாப்பாட்டிலும் அது கலக்கும்பொழுது உங்களுக்கு விரைவில் பயன் தரும் என்று சொல்லிருக்கின்றனர்.

ஒரு சாதாரணமான நபர்க்கு சுக்கிரனுக்குரிய அத்திபழத்தை ஒரு பீஸ் எடுத்து சாப்பிட்டால் அந்த நாளில் அவர்களுக்கு காம எண்ணம் அதிகரிக்கும். சுக்கிரனின் ஆற்றலை தரக்கூடிய பழத்தை கண்டுபிடித்து அந்த காலத்தில் இதனை சாப்பிடுங்கள் என்று சொல்லிருக்கின்றனர் என்றால் அதனை நாம் பாராட்டியே தீரவேண்டும்.

இந்தியாவை பொறுத்தவரை சத்துள்ள உணவு சாப்பிடுவதில் குறைவாக தான் நாம் இருக்கிறோம். உடல்பலம் இல்லாதவர்களாக நாம் இருக்கிறோம் என்பது தான் உண்மை. உங்களுக்கு எது எல்லாம் சத்து தருகின்றதோ அதனை எல்லாம் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: