Followers

Wednesday, November 1, 2017

சுக்கிரன்+சூரியன்


ணக்கம்!
          சுக்கிரன் சூரியன் இணைந்த இருந்தால் எப்படி பலன் இருக்கும் என்பதை பார்க்கலாம். சுக்கிரனுக்கும் சூரியனுக்கும் ஒத்துவராது. எதில் ஒத்துவராது என்றால் இரண்டும் ஏட்டிக்கு போட்டியாக செயல்படும்.

சுக்கிரன் என்றாலே அது திருமணத்திற்க்கு தானே முதலில் நமது சோதிடர்கள் எல்லாம் பார்ப்பார்கள். சுக்கிரன் என்ற கிரகம் திருமணத்திற்க்கு மட்டும் தான் இருக்கின்றது என்பது போல தான் சிலரின் கணிப்பு. திருமண ஏற்பாடு செய்யப்படும்பொழுது திடீர் என்று நடந்துவிடும்.

உலகத்தில் முக்கால்வாசிபேருக்கு திருமணம் ஒரு விபத்து போல நடக்கும் என்பார்கள். திருமணம் நடைபெறுவதை நாம் உற்று கவனித்தால் அது விபத்து போல தான் அரங்கேறும். அதனால் தான் விபத்து என்று சொன்னார்களா என்று தெரியவில்லை.

சூரியன் சுக்கிரன் பெரும்பாலும் அனைத்து ஜாதகத்திலும் இணைந்து செயல்பட்டுக்கொண்டு தான் இருக்கும். சூரியன் சுக்கிரன் இணைவு அதிகப்பட்சம் இருக்கும். இது எந்த வீட்டில் இருக்கின்றது என்பதை பொறுத்து பலன்கள் மாறுபடும்.

சூரியன் சுக்கிரன் இணைவு தவறு என்றே நமது சோதிடம் சொல்லுகிறது. அது அந்தளவுக்கு எல்லாம் தவறு இல்லை என்பது அனுபவத்தில் தெரிகிறது. எப்படி இருந்தாலும் சொந்த ஜாதகத்தை வைத்து இதனை அனுபவத்தில் ஆராய்ந்து அதன் பிறகு முடிவு எடுத்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: