Followers

Monday, January 15, 2018

மாட்டுப்பொங்கல்


வணக்கம்!
          இன்று மாட்டுப்பொங்கல். மாட்டுப்பொங்கல் நமது மாடுகளுக்கு மட்டும் நன்றி செலுத்தும்விதமாக கொண்டாடினாலும் இன்று மாலை நடைபெறும் படையல் என்பது நமது முன்னோர்களுக்கு செய்யும் ஒரு விருந்தாககூட அமையும்.

திதி மற்றும் வருடந்தோறும் செய்யும் தெவசம் எல்லாம் அவர்களுக்கு செய்யும் சடங்காக அமையும். வருடத்தில் மாட்டுப்பொங்கல் அன்று செய்யும் படையல் என்பது அவர்களின் விருப்பட்ட உணவை சமைத்து அவர்களுக்கு செய்யும் ஒரு விருந்தாக கூட அமையும். அவர்களுக்கு வேண்டியதை வைத்து படைத்து அவர்களின் ஆசியை பெற்று நாம் வருடம் முழுவதும் நன்றாக வாழ வழி செய்யும்.

எனக்கு தெரிந்த பல நகரத்து நண்பர்கள் மாட்டுப்பொங்கலை கண்டுக்கொள்வதே கிடையாது. நமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவே இருப்பார்கள். பல நண்பர்களிடம் பேசினேன் அவர்களும் நாங்கள் செய்வதில்லை என்றே சொன்னார்கள்.

நீங்கள் பல கோவில்களுக்கு செல்லலாம் பல பரிகாரங்களை எல்லாம் செய்யலாம் ஆனால் இப்படிப்பட்ட படையல் செய்யும்பொழுது தான் பெரியளவில் நாம் சாதிக்க முடியும். பெரியளவில் நமக்கு கைகொடுத்து உதவ நமது முன்னோர்களின் ஆசி வேண்டும்.

தற்பொழுது நீங்கள் நினைத்தால் கூட உடனே தயார் செய்து இன்று மாலை நீங்கள் இந்த படையலை செய்து ஆசி வாங்கிவிடலாம். ஒரு சில வீட்டில் அவர்களின் முன்னோர்கள் தெய்வமாக கூட இருப்பார்கள் அவர்களுக்கும் இன்று தான் படையல் செய்வார்கள். ஒரு நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: