Followers

Wednesday, January 10, 2018

முன்னோர்களுக்கு செய்யும் படையல்


வணக்கம்!
          நமது முன்னோர்களுக்கு செய்யக்கூடிய ஒன்று அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை. இறந்தவர்களுக்கு நாம் காட்டக்கூடிய நன்றி விசுவாசம் தான் அதிகமாக நம்முடைய மதத்தில் எல்லாம் பரவலாக அதிகமாக இருக்கும். எல்லா மதத்திலும் இதனை கடைபிடித்து வருவார்கள்.

முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி போன்றவற்றை விட அவர்களுக்கு பிடித்த விசயத்தை வைத்து செய்யக்கூடிய ஒன்றை நாம் செய்யும்பொழுது நமக்கு நமது முன்னோர்கள் நல்ல ஆசியை வழங்குவார்கள். அவர்களின் ஆசியை நாம் பெற்றுவிட்டால் நாம் செய்யும் எந்த ஒரு காரியமும் தடை இல்லாமல் அனைத்தும் வெற்றி பெற்றுவிடும்.

நமது முன்னோர்களை நினைவுகூறும் ஒரு வகையில் ஒரு விசயத்தை செய்ய வேண்டும். அது நமக்கு சாத்தியப்படக்கூடிய வகையில் விரைவில் வர இருக்கின்றது. வருகின்ற மாட்டுப்பொங்கல் அன்று எல்லா ஊர்களிலும் நடைபெறுகின்ற விசயத்தை சொல்லுகிறேன். நகர்புறத்தில் இதனை செய்வதில்லை என்பதற்க்காக இதனை சொல்லவேண்டியிருக்கின்றது.

மாட்டுப்பொங்கல் அன்று இரவு உங்களின் முன்னோர்கள் இறந்தவர்களுக்கு அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்து படைத்து ஒரு வேஷ்டி அதற்கு சட்டை ஒரு சேலை எடுத்து வைத்து படையலை போட்டு சாமி கும்பிடவேண்டும்.

உதாரணமாக உங்களின் தாத்தா இறந்துவிட்டால் அவர்க்கு ஒரு உணவு பிடித்து இருந்தால் அந்த குறிப்பிட்ட உணவையும் நீங்கள் சமைக்கவேண்டும். அதனை படையலில் வைத்து சாமி கும்பிடவேண்டும்.

மாட்டுப்பொங்கல் மாலை வேளையில் இதனை செய்யவேண்டும். கிராமபுறங்களில் இது நடைமுறையில் இருக்கின்றது. நகர்புறத்தில் இதனை செய்வதில்லை நீங்களும் கண்டிப்பாக இதனை செய்யவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: