Followers

Saturday, May 12, 2018

கெடுதல் தரும் காலக்கட்டம்



வணக்கம்!
ஒரு குடும்பம் ஒவ்வொரு நாளும் உயர்ந்துக்கொண்டே செல்லவேண்டும் மாறாக ஒவ்வொரு நாளும் அழிந்துக்கொண்டே சென்றால் அது மிகப்பெரிய ஒரு அழிவை நோக்கி செல்லும் என்பது தான் அனுபவ உண்மை.

குடும்பத்தில் உள்ள தலைவன் என்பவர் இதனை  உற்று நோக்கிக்கொண்டே இருக்கவேண்டும். எப்படி சென்றுக்கொண்டு இருக்கின்றது என்பதை உற்றுநோக்கவேண்டும் ஒரு சில குடும்ப உறுப்பினர்கள் அழிவை ஏற்படுத்திக்கொண்டே செல்வார்கள். இது குடும்பத்திற்க்கு பெரிய இழப்பை ஏற்படுத்திவிடும்.

பொருளாதாரம் மட்டும் இல்லை நல்ல காரியங்கள் கூட நடக்காமல் தீயகாரியங்கள் நடந்துக்கொண்டே இருக்ககூடாது அப்படி நடந்துக்கொண்டே இருந்தால் எங்கு இருந்து பிரச்சினை வருகின்றது என்பதையும் தெரிந்துக்கொள்ளவேண்டும்.

அழிவு பாதைக்கு செல்வதற்க்கு காரணமாக இருப்பது அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் தீயக்கிரங்களின் தசா நடக்கும். ராகு தசா மற்றும் சனி தசா அல்லது மறைவிடங்களின் தசா நடந்தால் அது அழிவு பாதைக்கு இட்டு சென்றுவிடும்.

தொட்டது அனைத்தும் துலங்காமல் செல்வது மற்றும் பிரச்சினைகளை அதிகம் சந்திக்க வைப்பது எல்லாம் மேலே சொன்ன தசாவால் அதிக பிரச்சினையை சந்திக்க வைத்துவிடும். இதில் ராகு தசா மட்டும் கொஞ்சம் அதிகமாகவே இதனை காட்டிவிடும்.

நான் உங்களிடம் பயமுறுத்துவதற்க்காக இதனை சொல்லவில்லை. நீங்கள் இந்த காலக்கட்டங்களில் இருந்தால் அதில் இருந்து தப்பிப்பதற்க்கு என்ன செய்யலாம் என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன். தொடர்ச்சியான வழிபாடு மற்றும் பரிகாரங்களை செய்யும்பொழுது இதில் இருந்து தப்பிக்கலாம்.

கஷ்டமான காலக்கட்டங்களில் நமது புத்திநிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுவிடும். நமக்கு எது செய்யவேண்டும் எதனை செய்யகூடாது என்பது கூட நமக்கு தெரியாமல் சென்றுவிடுகின்றது. இதற்கு தினமும் கோவிலுக்கு செல்வது கூட நமது நல்ல எண்ணங்களை உருவாக்கி தரும்.

பரிகாரம் என்றால் நம்மிடம் தான் செய்யவேண்டும் என்பதில்லை உங்களுக்கு தெரிந்தவற்றை செய்யலாம். உங்களுக்கு தெரிந்தவர்கள் நன்றாக செய்தால் கூட அவர்களிடம் சென்று இதனை செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: