Followers

Wednesday, May 2, 2018

சிறப்பு பதிவு


வணக்கம்!
           மேலே ஒரு உதாரண ஜாதகத்தை கொடுத்து இருக்கிறேன். இந்த ஜாதகத்தில் ஏழாவது வீட்டை நல்ல பலப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் என்ன செய்யவேண்டும் என்பதை பார்க்கலாம். ஏழாவது வீடாக வருவது கன்னி வீடு. கன்னி ராசியின் அதிபதி புதன்கிரகம்.

புதன்கிரகம் எந்த நட்சத்திரத்தில் செல்கின்றது என்பதை முதலில் பார்த்துக்கொள்ளுங்கள். புதன் நட்சத்திரம் இந்த ஜாதகத்தில் பூரம் நட்சத்திரத்தில் செல்கின்றது. பூரம் சுக்கிரனின் நட்சத்திரம்.

ஏழாவது வீட்டில் அமர்ந்த கிரகத்தை அடுத்தாக எடுத்துக்கொள்ளுங்கள்.  சந்திரன் மற்றும் சுக்கிரன். சந்திரன் செல்லும் நட்சத்திரம் ஹஸ்தம் நட்சத்திரம் அதன் அதிபதி சந்திரன். சுக்கிரன் அமர்ந்து இருக்கின்றது. அது எந்த நட்சத்திரத்தில் செல்கின்றது என்று பார்த்தால் அது உத்திரம் சூரியன் நட்சத்திரத்தில் செல்கின்றது. 

இதுவரை நமக்கு கிடைத்தது
புதன் பூரம் நட்சத்திரம்
சந்திரன் ஹஸ்தம் நட்சத்திரம்
சுக்கிரன் உத்திரம் நட்சத்திரம்.

மறுபடியும் நாம் என்ன செய்யவேண்டும் என்றால் ஏழாவது வீட்டை பார்க்கும் கிரகம் என்ன என்று பார்க்கவேண்டும். ஏழாவது வீட்டை பாரக்கும் கிரகம் மூன்றாவது வீட்டில் இருந்து குரு கிரகம் பார்க்கின்றது. குரு செல்லும் நட்சத்திரம் ரோகிணி நட்சத்திரம் அதன் அதிபதி சந்திரன்.

மொத்தமாக நான்கு நட்சத்திரத்தை சரி செய்யவேண்டும்.

இந்த நான்கு நட்சத்திரத்தை வழிபாட்டால் சரி செய்துக்கொள்ளலாம். உடனே நீங்கள் வழிபாடு செய்யவேண்டாம். இதனைப்பற்றி நிறைய ஆராய்ச்சி செய்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். அதன்பிறகு வழிபாடு செய்து பலப்படுத்திக்கொள்ளலாம்.

நமது சிறப்பு கட்டண பதிவுக்கு எழுதிய பதிவு இது. இதனை கொடுத்து இருக்கிறேன். உடனே கட்டண பதிவில் இணைந்துக்கொண்டு பலன் பெறுங்கள்.

நமது அம்மன் பூஜை வரும் பத்தாம் தேதிக்குள் நடைபெறும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: