Followers

Saturday, May 26, 2018

பச்சைப்பரப்புதல்


வணக்கம்!
          குலதெய்வத்திற்க்கு பச்சைப்பரப்புதல் பற்றிய பதிவு இது. உங்களின் குலதெய்வம் உங்களுக்கு மட்டும் அல்லாமல் உங்களின் பங்காளிகளுக்கும் குலதெய்வமாக இருக்கும். இந்த குலதெய்வத்திற்க்கு நீங்கள் வருடத்திற்க்கு ஒரு முறை பூஜை செய்தாலும் உங்களின் வீட்டில் மாதந்தோறும் குலதெய்வத்திற்க்காக இந்த சிறப்பு பூஜையை செய்யலாம். உங்களின் குலதெய்வம் உங்களின் வீட்டிற்க்கு வந்து அருள்பாலிக்கும்.

பச்சைப்பரப்புதல் பற்றி நமது ஜாதககதம்பத்தில் நிறைய பதிவுகள் தந்திருக்கிறேன். தொடர்ச்சியாக இந்த பதிவு கொடுத்த காரணத்தால் பலர் இந்த பூஜையை வீட்டில் தொடர்ந்து செய்து வருகின்றனர். இதுவரை செயயாதவர்களும் வருகின்ற வைகாசி விசாகத்தில் இருந்து கூட ஆரம்பித்து செய்யலாம்.

உங்களின் பூஜையறையில் ஒரு வாழை இலையை பரப்பி அதில் கொஞ்சம் பச்சை அரிசியை நீரில் அலசி அதனை அப்படியே பரப்புங்கள். மாவிளக்கு மாவில் உருண்டை பிடித்து மூன்று அல்லது ஐந்து  என்ற கணக்கில் உருண்டையை பிடித்து அதில் வையுங்கள். அதில் நெய்கொண்டு உருண்டை மீது தீபம் ஏற்றுங்கள். உருண்டை மேல் சிறிய குழி செய்து அதில் வாழைபழத்தோல் கொண்டு நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

உங்களின் குலதெய்வத்திற்க்கு பிடித்த கனிகள் மற்றும் நைவேத்தியத்தையும் படைக்கலாம். அதன் பிறகு தீபாராதனை செய்துவிட்டு நன்றாக உங்களின் குலதெய்வத்திடம் உங்களின் பிராத்தனையை வைத்து வணங்குங்கள். அதன் பிறகு நைவேத்தியத்தை உங்கள் சாப்பிடலாம்.

உங்களின் குலதெய்வத்திற்க்கு நீங்கள் செய்யும் இந்த பூஜை உங்களின் குலத்தெய்வம் மனமிரங்கி உங்களுக்கு அனைத்தையும் கொடுக்கும். இந்த பூஜையை தொடர்ச்சியாக நீங்கள் செய்து வந்தால் விரைவில் ஒரு நல்ல மாற்றத்தை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: