வணக்கம்!
பொங்கல் கொண்டாடத்திலும் நம் பதிவு பக்கம் வந்து ஏதாவது ஒன்றை சொல்லிருக்க மாட்டாரா என்று வரும் நண்பர்களுக்கு கண்டிப்பாக ஏதாவது சொல்லவேண்டும் என்று இந்த பதிவை தருகிறேன்.
எல்லா பகுதியிலும் கொண்டாட்டம் அதிகம் இருந்தாலும். தஞ்சாவூர் பகுதியில் உழவர்கள் அதிகம் இருப்பார்கள் கூடுதல் கொண்டாட்டம் இருக்கும். நான்கு நாட்களிலும் கொண்டாட்டம் தான். எங்கள் பகுதியில் ஜல்லிகட்டு மாதிரி விளையாட்டுகள் கிடையாது. வெறும் கொண்டாட்டம் மட்டுமே.
தமிழ்நாட்டில் எந்த ஒரு பண்டிகை கொண்டாடத்திலும் சினிமா என்ற ஒன்றை திணித்துவிடுவார்கள். சினிமா இல்லாமல் பண்டிகை கிடையாது என்பது மாதிரி ஒரு தோற்றத்தை உருவாக்கிவிடுகிறார்கள். தொலைக்காட்சியிலும் சினிமைவைப்பற்றி தான் அதிகம் சொல்லிக்கொண்டு இருப்பார்கள். சினிமாவிற்க்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது கூடாது என்று சொல்லவருகிறேன். சினிமாவை அது சினிமா என்று தான் பார்க்கவேண்டும். அதனை கொண்டுவந்து வாழ்க்கையோடு இணைக்ககூடாது.
தமிழ்நாட்டில் இன்றைய தேதியில் பல ஊர்களில் சினிமா தியேட்டர் இருந்தாலும் சினிமா அதிகம் ஓடாத ஒரு ஏரியா இருக்கின்றது. சினிமாவிற்க்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. ஒரு சினிமா பத்து நாட்கள் ஓடினாலே அது மிகப்பெரிய வெற்றியாகவே கருதப்படும். ஒரு பெரிய நடிகரின் படம் வெளியானாலும் தியேட்டரில் இருபது பேருக்கு மேல் கூட இருக்கமாட்டார்கள்.
சினிமாவிற்க்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமோ அதனை மட்டும் தான் கொடுப்பார்கள். அந்த பகுதியில் நிறைய பட சூட்டிங் நடைபெறும். இன்றைய தேதியிலும் நிறைய நடக்கிறது. அதனை என்ன என்று கூட கேட்கமாட்டார்கள். பெரிய நடிகர் வந்தால் கூட அவரிடம் நின்றுக்கொண்டு போட்டோ கூட எடுக்கமாட்டார்கள்.
இன்றைய தேதியில் அதிக அறிவாளிகளை கொண்ட ஒரு மாவட்டமாகவே அது இருக்கின்றது என்று தான் சொல்லவேண்டும். எனக்கு கேரளாவை பிடிக்கும் அதற்கு காரணம் இவ்வளவு நடிகர் இருந்தும் முதல்வராக வரமுடியவில்லை என்ற காரணத்தால் பிடிக்கிறது. அதற்கு பிறகு அறிவாளிகள் உள்ள மாவட்டமாகவே அது இருக்கின்றது என்று பிறர் சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறேன். அவர்களை போல் உங்களின் மாவட்டத்தையும் மாற்ற உங்களுக்கு அதிக பங்குள்ளது என்பதை இந்த நேரத்தில் சொல்ல நினைக்கிறேன். எந்த மாவட்டம் என்று நீங்கள் கேட்கிறீர்களா அது தஞ்சாவூர் மாவட்டம் தான்.
சொந்த மாவட்டத்தை இப்படி தூக்கி நிறுத்தகூடாது என்று நினைக்கலாம். உண்மையை தான் சொல்லுகிறேன். நடிகரை எல்லாம் அதிகம் மதிக்கமாட்டார்கள். அப்படியே சினிமாவை பார்த்தாலும் அது சினிமா தான் என்ற மனபக்குவத்தில் பார்ப்பார்கள். சினிமா வேறு வாழ்க்கை வேறு என்று புரிந்து வைத்திருப்பார்கள். அதனால் இதனை சொல்லுகிறேன். நீங்கள் ஒரு படம் வெளியாகும்பொழுது வந்து பாருங்கள் அது எந்தளவுக்கு கொண்டாடப்படுகிறது என்பது தெரியும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Ippadi thaan irukkanum
Post a Comment