Followers

Friday, January 22, 2016

விளக்கம்



வணக்கம்!
          காதல் திருமணத்தைப்பற்றி சொல்லும்பொழுது பல நண்பர்கள் அந்த கருத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பல நண்பர்கள் பாராட்டவும் செய்தனர்.

ஜென் மதத்தில் ஒரு கருத்து எனக்கு பிடிக்கும். அதன் முழு சாராம்சமும் என்ன என்றால் உனக்கு என்ன தேவையோ அதனை பிறர்க்கு செய். உனக்கு என்ன தேவையில்லையோ அதனை பிறர்க்கு செய்யாதே என்பது தான். இது எனக்கு பிடித்த ஒன்று.

ஒரு சில கருத்துக்கள் எனக்கு காலதாமதமாக கிடைத்தன. அந்த கருத்து முன்பே எனக்கு கிடைத்து இருந்தால் இன்னமும் நன்றாக வாழ்ந்திருப்பேன். என்ன செய்வது நமது விதி அப்படி இருக்கின்றது.

நான் எனக்கு தேவையானவற்றை சொல்லிவிடுகிறேன். உங்களுக்கு தேவைப்பட்டால் அதனை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையில்லை என்றால் அதனை விட்டுவிடுங்கள் அதுபோலதான் காதல் திருமண கருத்தும். காதல் திருமணம் செய்யகூடாது என்று சொல்லிருக்கிறேன். இதனை ஒருவர் எடுத்துக்கொண்டு அதனை பின்பற்றினாலே போதுமான ஒன்று.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு