Followers

Sunday, October 18, 2015

பாக்கியஸ்தானம்


ணக்கம்!
          பாக்கியஸ்தான வீட்டைப்பற்றி பார்த்து வந்தோம். அதில் ஒரு சில கருத்தைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

ஒருவர் சோதிடம் பார்க்க வந்திருந்தார். அவரின் தந்தைக்கு முழங்கால் வலியால் அவதிப்பட்டார். தந்தை மீது கடுமையான பாசம்  அந்த காரணத்தால் மிகுந்த செலவு செய்து அவரின் தந்தைக்கு மருத்துவம் எல்லாம் பார்த்தார். இன்றைய காலத்தில் தந்தை மீது பையன்கள் பாசம் வைப்பது எல்லாம் பெரிய விசயம். மனிதர்களை பற்றி நான் குறை சொல்லவில்லை காலம் கலிகாலம் அல்லவா. எவ்வளவு செலவு செய்தாலும் அவரின் தந்தைக்கு வலி போகவில்லை. 

அவரின் ஜாதகத்தில் சூரியன் பாக்கியஸ்தானமான ஒன்பதாவது வீட்டில் மகர ராசியில் அமர்ந்து இருந்தது. சனியின் வீடாக இருந்தாலே போதும் எது அகப்படுகிறதோ அதனை உடைத்துவிடுவார். முடவனின் குணம் அல்லவா அதுவும் சூரியன் சிக்கினால் சும்மா விடுவாரா. பாக்கியஸ்தானத்தில் அமர்ந்த காரணத்தால் தந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடுவார். 

தந்தைக்கு கால் ஊனம் ஏற்படாமல் வலியை மட்டும் கொடுத்துவிட்டார். தந்தை நிறைய புண்ணியம் செய்திருப்பார் என்று நினைக்கிறேன். வலியோடு விட்டுவிட்டார். நம்மிடம் வந்தற்க்கு ஏதாவது ஒன்றை சொல்லவேண்டும் அல்லவா அதனால் அவருக்கு ஒரு பரிகாரத்தை சொன்னேன்.

அவரின் குலதெய்வம் கருப்பராயன். அவர் இதுவரை கும்பிட்டு வந்தது அது தான். என்ன ஒன்று என்றால் அவரின் சொந்த ஊரில் இருக்கும் குலதெய்வத்தை கும்பிடாமல் வெளியூரில் இருக்கும் குலதெய்வத்தை கும்பிட்டுவந்தார். அவரிடம் சொந்த ஊரில் இருக்கும் குலதெய்வத்தை கும்பிடுங்கள் என்று சொன்னேன். இரண்டு மாதம் சென்று என்னை தொடர்புக்கொண்டு தற்பொழுது பரவாயில்லை என்றார். விடாமல் தொடர்ந்து கும்பிட்டு வாருங்கள் சரியாகிவிடும் என்றேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: