Followers

Saturday, October 3, 2015

பாக்கியஸ்தானம்


ணக்கம்!
          பாக்கியஸ்தானத்தைப்பற்றி எழுதிக்கொண்டு இருக்கிறோம். அதனை படித்துவிட்டு ஒவ்வொருவரும் தனது வாழ்க்கையிலும் இப்படி தான் நடந்துக்கொண்டு இருக்கின்றது என்று சொன்னார்கள். அனைவருக்கும் நன்றி. நான் எழுதுவது எனது அனுபவத்தில் நடந்ததை எழுதுகிறேன் அது உங்களின் வாழ்விலும் அப்படி வரும்பொழுது அது உங்களுக்கு ஏற்றுக்கொள்கிறது.

நமக்கு அமையும் குருவும் பாக்கியஸ்தானத்தில் இருந்து தான் கிடைக்கிறது. பொதுவாக நான் குருவிடம் இருந்து தான் அனைத்தையும் கற்கிறோம். குருவின் வார்த்தை நமக்கு அறிவை கொடுக்கிறது.

நான் அனைவரிடமும் நன்றாக பழகுவேன் ஆனால் குரு அந்தளவுக்கு பழகமாட்டார். எனக்கு நிறைய தொழில் நண்பர்கள் பழக்கம். இவர்களை என்ன செய்துக்கொண்டு இருக்கிறார்கள் இவர்கள் எந்தளவுக்கு ஈடுபாடு காட்டுகிறார் என்பது எல்லாம் நான் கவனிப்பதில்லை ஆனால் எனது குரு கவனித்துக்கொண்டு இருப்பார். இதில் ஏதாவது ஒரு பிரச்சினை என்று வரும்பொழுது என்னிடம் குரு சொல்லிவிடுவார். இனி அவர்களிடம் தொடர்பு இருக்ககூடாது என்றுவிடுவார்.

அவர் சொல்லிவிட்டால் அடுத்த பேச்சு என்பது என்னிடம் கிடையாது ஏன் என்றால் பணத்தை சம்பாதித்துவிடலாம் குருவை சம்பாதிக்கமுடியாது. பாக்கியஸ்தானத்தை நாம் காப்பாற்ற வேண்டும் என்றால் இது தான். நாம் எந்த விதத்திலும் அதனை மீறிவிடகூடாது. பாக்கியஸ்தானத்தில் இருந்து கிடைப்பதை நாம் ஒரு சில நேரங்களில் தவறாக ஏதாவது செய்யும்பொழுது நமக்கு பெரிய அடி விழுந்துவிடும்.

நமக்கு ஒன்று கிடைத்து அது நம்மை விட்டு செல்லுகிறது என்றால் பெரும்பாலும் நமது முட்டாள்தனத்தில் தான் நம்மை விட்டு செல்லும். பொறுமையாக அனைத்தையும் கையாண்டால் போதும். பாக்கியஸ்தானம் நமக்கு நிறைய கொடுத்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

nallur parames said...

Pakkuvam vendum engireergal.