Followers

Sunday, October 18, 2015

பொறுமை


ணக்கம்!
          பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு நம்மை சந்திப்பவர்களுக்கு சொல்லும் ஒரு பரிகாரம் என்ன என்றால் பொறுமையாக இருங்கள் என்ற வார்த்தை மட்டுமே.

பொதுவாகவே ஒரு கிரகம் பாதிப்பை ஏற்படுத்தும் முன்பு அதற்கு பரிகாரம் செய்துவிட்டால் பிரச்சினையில் இருந்து முழுமையாக தப்பிக்கவில்லை என்றாலும் ஒரளவு தப்பித்துவிடலாம் ஆனால் கிரகங்கள் தாக்க ஆரம்பித்தபிறகு நாம் பரிகாரம் செய்தாலும் நாம் பட்டு தான் ஆகவேண்டும்.

ஒரு சிலர் சரியாக மாட்டிக்கொண்ட பிறகு அல்லல்பட்டு தேடி வருவார்கள். கையில் எதுவும் இல்லை என்று வருவார்கள். அப்படிப்பட்டபவர்களிடம் இந்த நேரத்தில் எதுவும் செய்யவேண்டாம் பொறுமையாக இருந்துவிடுங்கள். உங்களை சுற்றி எது நடந்தாலும் பொறுமையாக இருங்கள். கொஞ்ச நாளில் சரியாகிவிடும் என்று சொல்லுவேன். அப்படி இருந்தும் அவர்களால் பொறுமையாக இருக்கமுடியாது காரணம் சிக்கல் அப்படிப்பட்டதாக இருக்கும்.

கையிலும் ஒன்றும் இல்லை. வழியே இல்லை என்றாலும் பொறுமையாக இருந்துவிட்டால் போதும் அந்த காலகட்டம் கொஞ்ச நாளில் மாறிவிடும். அதன் பிறகு ஏதாவது ஒரு வழியை நாம் தேர்ந்தெடுத்து முன்னேற்றம் அடைந்துவிடலாம்.

ஒரு கிரகம் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு பிரச்சினையை கிளப்பினால் சுற்றி இருப்பவன் முழுவதும் எதிரியாகவே மாறிவிடுவார்கள். அனைவரும் பழி தீர்ப்பது போல் நடக்க ஆரம்பித்துவிடுவார்கள். யாரை நம்பி உதவி கேட்பது என்ற நிலை ஏற்பட்டுவிடும்.

தவறான நேரத்தில் ஏதாவது ஒரு முடிவை எடுக்கும்பொழுது அது நமக்கு மேலும் பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும். உங்களுக்கு இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டுவிட்டால் அந்த நேரத்தில் பொறுமையாக இருங்கள். கொஞ்ச காலம் போகட்டும் என்று இருங்கள் கண்டிப்பாக ஒரு நல்ல நேரம் உங்களுக்கு வரும்.

சென்னைக்கு வருவதாக ஒரு திட்டம் இருக்கின்றது. எத்தனை பேர் சந்திப்பார்கள் என்பதை பொறுத்து சென்னை பயணம் முடிவாகும். சென்னையில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: