Followers

Tuesday, October 6, 2015

தர்மம்


ணக்கம்!
          பாக்கியஸ்தானத்தைப்பற்றி பார்த்து வருகிறோம் அதில் ஒரு தகவலை பற்றி பார்க்கலாம். ஒரு சில சோதிடர்கள் பாக்கியஸ்தானத்திற்க்கு பரிகாரம் செய்யமுடியாது அதுவாகவே கிடைத்தால் மட்டுமே உண்டு என்று சொல்லுவார்கள்.

அவர் அவர்களின் அனுபவத்தை வைத்து இதனை சொல்லலாம் ஆனால் இதற்கும் பரிகாரம் உண்டு. பாக்கியஸ்தானத்திற்க்கு தர்மஸ்தானம் என்ற பெயர் உண்டு. தர்மம் செய்து இந்த ஸ்தானத்தை நாம் நல்ல படியாக வேலை செய்ய வைக்கமுடியும்.

தர்மம் என்றவுடன் நமக்கு முதலில் ஞாபகம் வருவது பிச்சைக்காரர்கள் தான். உண்மையில் எனக்கு பிச்சைக்காரர்களுக்கு தர்மம் செய்வது பிடிக்காது. தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்கள் பிச்சை எடுத்து குடிப்பதற்க்கு தான் அதிகம் பயன்படுத்துக்கிறார்கள்.

ஒரு சில முருகன் கோவிலுக்கு நான் செல்லுவதே ஒரு சில நல்ல யாசகர்கள் அங்கு இருப்பார்கள். கடவுள் மேல் உள்ள ஈர்ப்பு காரணமாக இதனை செய்பவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு மட்டும் யாசகம் செய்வது உண்டு. 

ஒரு சில இடத்தில் வயதானவர்கள் தங்களின் முதுமை காரணமாக பிச்சை எடுப்பவர்களாக இருப்பார்கள் அவர்களுக்கு உதவலாம். அதோடு நம்மோடு பழகிக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு அவசர காலத்திற்க்கு நாம் உதவி செய்வது கூட தர்மம் தான். 

அதிக தடை எந்தவிதத்திலும் முன்னேற்றம் இல்லை என்று நினைப்பவர்கள் முடிந்தளவு தர்ம காரியங்களில் ஈடுபட்டு அதன் வழியாக இதற்கு தீர்வு காணலாம். தர்மம் செய்யவதற்க்கு கூட வழி இல்லை என்று நினைப்பவர்கள் ஏதாவது ஒரு ஆலயத்திற்க்கு சென்று அங்கு நடைபெறும் பொதுப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளலாம். 

எனக்கு தெரிந்த ஒரு நண்பர் இருக்கின்றார் அவர் நல்ல வசதிபடைத்தவர். அவர் நிறைய தொழில் செய்கிறார். அவர் தினமும் அவரின் தொழில் செய்யும் இடத்தில் குறைந்தது ஐம்பது பேருக்கு அன்னதானம் செய்துவிடுவார். பணம் வந்தால் கூட நீங்கள் இப்படிப்பட்ட காரியங்களை செய்யும்பொழுது உங்களின் குடும்பம் மேலும் மேலும் வளரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

KJ said...

Sir,

Thanks for the advice.
Even some corporate companies provide Lunch and Dinner for their employees. Good to see such things.
Darmam Thalai kaakum!!!

Great service you are doing. Thanks a lot.

Regards,
KJ.