Followers

Monday, March 26, 2018

சிறப்பு பதிவு 1

வணக்கம் !
        ஜாதக கதம்பத்தின் கட்டண சேவைக்காக எழுதப்பட்ட பதிவை உங்களுக்கு தந்திருக்கிறேன். உங்களை தூண்டில் போட்டு இழுக்க இதனை செய்வில்லை. கோவிலாக இருந்தாலும் அதற்கு மணி என்று ஒன்றை வைத்து அடித்து விளம்பரம் என்பதை செய்து இருக்கின்றனர். 

புதிய கட்டண பதிவில் அப்படி என்ன இருக்கும் என்பதை நீங்களும் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்க்காக சிறப்பு பதிவு என்ற தலைப்பில் தந்திருக்கிறேன். தொடர்ச்சியாக பல பதிவுகள் தருகிறேன் உங்களுக்கு பிடித்து இருந்தால் அதில் இணைந்துக்கொள்ளலாம். கண்டிப்பாக அனைவரும் இணையவேண்டும் என்பதை அன்போடு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். 



வணக்கம்!
          சோதிடக்கலை என்ற தெய்வீகலையை பல முன்னோர்கள் கண்டுபிடித்து அதனை மனிதனுக்கு பயன்படும் விதத்தில் எழுதி வைத்து அதனை பாதுகாத்து தற்பொழுது வரை அனைவருக்கும் பயன்பட்டு வருகின்றது என்றால் அந்த கலையின் இருக்கும் உண்மையே அதற்கு ஒரு பெரிய அங்கீகாரமாக இருக்கின்றது.

மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மட்டும் இன்றி இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அதனை பயன்படுத்தும் விதமாக தான் உருவாக்கி இருக்கின்றனர். மனிதர்கள் தனக்கு மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். எங்களின் ஊர் பகுதியில் ஒரு மாடு சினை பட்டால் கூட அதற்கு பிறக்கும் கன்று இப்படி தான் இருக்கும் என்று சொன்ன சோதிடம் எல்லாம் இருக்கின்றது.

பூமியில் பிறக்கும் மனிதன் மட்டும் அல்லாமல் அனைத்திற்க்கும் சோதிடம் கணித்து சொல்லமுடியும். காலத்திற்க்கு தகுந்தார்போல மனிதனுக்கு மட்டும் இது அதிகப்பட்சம் பயன்படுகின்றது. ஒரு காலத்தில் மனிதன் திருமணத்திற்க்கு என்று ஜாதகத்தை எடுத்த காலம்போய் இன்று அனைத்திற்க்கும் சோதிடத்தை கையில் எடுக்க ஆரம்பித்துவிட்டான்.

கடந்த காலத்தில் ஒரு மனிதனை காப்பாற்ற அவனுக்கு பல குடும்ப உறுப்பினர்கள் இருந்தனர். ஒரு மனிதனுக்கு ஒரு பிரச்சினை வந்தால் அதனை தீர்க்க ஒரு ஊரே வந்து நிற்க்கும் இன்று ஒரு மனிதனுக்கு பிரச்சினை வந்தால் அவனை காப்பாற்ற நெருங்கிய உறவாக இருக்கும் மனைவி மகன்கள் கூட வருவதில்லை. மனிதன் நாகரீக வாழ்க்கை வாழ்கிறேன் என்று எண்ணி பிரச்சினையை அதிக வளர்த்துக்கொண்டுவிட்டு அதற்கு சோதிடத்தை ஆராய்கிறான். சோதிடமும் அவனுக்கு ஒரு தீர்வை கொடுக்கின்றது.

சோதிடம் மனிதனின் பிரச்சினைக்கு மட்டும் தீர்வு கொடுக்கும் ஒரு கலை மட்டும் அல்ல ஒவ்வொரு மனிதனும் எப்படிப்பட்ட வாழ்க்கை அமையும் அவனுக்கு வாழ்க்கை எப்படி செல்லும். முன்ஜென்மம் எப்படிப்பட்டது இந்த ஜென்மம் எப்படி இருக்கும் அடுத்த ஜென்மம் எப்படி அமையும் என்பதை எல்லாம் சொல்லக்கூடிய ஒரு கருவி. 

மனிதன் எப்படிப்பட்ட உயிரில் இருந்து உயிர் எடுத்து இருக்கிறான். அவனின் இந்த ஜென்மம் எப்படி அமையும். இந்த ஜென்மத்தில் அவன் எப்படி மரணம் எய்துவான். அவனின் உடல் எப்படி கதி அடையும். என்பதை எல்லாம் சொல்லக்கூடிய ஒன்று. 

மனிதன் எடுத்த பிறவி எப்படிப்பட்டது. மனிதனுக்கு ஆறு அறிவு என்றாலும் எல்லா மனிதனுக்கும் அந்த ஆறு அறிவையும் கொடுத்துவிடுவது இல்லை. மனிதனுக்கு கொடுத்த ஆறு அறிவையும் பயன்படுத்த என்ன வழி என்பதையும் சொல்லும் சோதிடமும் இருக்கின்றது. அறிவு என்ன பெரிய விசயம் அறிவை தாண்டி ஞானத்தை அடைய என்ன வழி என்பதையும் சொல்லும் ஒரு கருவி தான் சோதிடம்.

மனிதனுக்கு ஒவ்வொரு நொடியும் எப்படி அமையும் என்பதையும் சொல்லக்கூடிய ஒரு கருவியாக தான் இருக்கின்றது. சோதிடம் நிறைய கருத்துக்களை உள்தாங்கி நிற்கின்றது. சாேதிடர்கள் குறைந்த கருத்துக்களோடு பலனை சொல்லிக்கொண்டு இருக்கின்றோம். 

சோதிடத்தில் அனைத்தையும் கற்று நாம் சொல்லுவதற்க்குள் நம்முடைய இந்த ஜென்மம் சென்றுவிடும் என்றாலும் ஒரளவு நன்றாக தெரிந்து இருந்தால் நம்முடைய வாழ்க்கைக்கு பயன்படும் விதத்தில் அதனை அமைத்துக்கொள்ளமுடியும்.

ஒரு சோதிடரிடம் நூறு ரூபாய் கொடுத்து பலனை தெரிந்துக்கொண்டு வாழ்ந்தால் என்ன என்று நம்முடைய மனம் நினைக்காமல் இருக்காது. ஒவ்வொரு நாெடியும் எந்த சோதிடர்களும் சொல்லுவதில்லை. ஒவ்வொரு நொடியும் உங்களுக்கே தெரிந்துவிட்டால் உங்களின் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் எந்த காரியமும் அது தோல்வியை சந்தித்துவிடாது. வெற்றி அல்லது தோல்வியை விடுங்கள். உங்களிடம் இருந்து எதனையும் காலம் பறித்துவிடாது. அதுவே மிகப்பெரிய வெற்றிகரமான ஒரு வாழ்க்கை. 

ஒவ்வொரு நொடியும் சொல்லக்கூடிய ஒரு சோதிடத்தை நாம் மீறி நம்மால் என்ன செய்துவிடமுடியும் என்று மனம் கேட்காமல் இருக்காது. ஒரு மனிதனின் மேல் செலுத்தும் கிரகங்களின் சக்தியையும் மீறி ஒரு மனிதனால் செயல்படமுடியுமா என்றால் கண்டிப்பாக செயல்படமுடியும்.

ஒரு அமாவாசை அன்று அனைத்து கிரகங்களும் தன்னுடைய பலத்தை இழந்துவிடும். உண்மையை சொல்லபோனால் அமாவாசை அன்று கிரகங்களின் இருந்து வரும் கிரகசக்தி வருவதில்லை என்பது உண்மையான ஒன்று. அமாவாசை அன்று நீங்கள் உங்களின் புத்தி என்ற சக்தியை வைத்து வருகின்ற நாளில் இதனை தான் செய்யவேண்டும் என்று திட்டமிட்டுவிட்டால் கூட உங்களை மீறி செயல்படுவது வெறும் ஐந்து சதவீதம் கூட இருக்காது. 

நான் சொல்லுவது அமாவாசை என்பது ஒரு உதாரணத்திற்க்காக சொல்லுகிறேன். பல சாதகமான நல்ல காலம் எல்லாம் மனிதனுக்கு கொடுத்துக்கொண்டு இருக்கின்றது அதனை நாம் சரியாக பயன்படுத்துவதில்லை பயன்படுத்த தெரிந்தவன் பிழைத்துக்கொள்வான் தெரியாதவன் மாட்டிக்கொள்கிறான்.

உங்களின் ஜாதகத்தை பல முறையில் பயன்படுத்த முடியும். நல்ல வழியை கொண்டும் செல்லமுடியும். தீயவழியையும் கொண்டு செல்லமுடியும். உதாரணமாக குருவின் வழியில் நின்றால் நேர்மையான வழியில் செல்லலாம். குரு கிரகத்தின் காரத்துவத்தை பிடித்துக்கொண்டு செல்லுவது. ராகுவின் வழியிலும் செல்லலாம். ராகுவின் காரத்துவத்தை வைத்துக்கொண்டு செல்வது.

தேர்ந்தெடுக்கும் முறையில் பயன்படுத்தமுடியும் என்பது ஜாதகத்தில் உள்ளது. நாம் முடிந்தவரை அதனை தேர்ந்தெடுத்துக்கொண்டு செல்லமுடியும். ஒரே கிரகத்திற்க்கு வேண்டியதை செய்துக்கொண்டே இருந்தால் நாம் ஒரு சில காலக்கட்டங்களிலேயே நாம் அதன் வழியில் நிற்பது தெரியவரும்.

இராமனா அல்லது இராவணனா என்பதையும் விட இரண்டையும் பயன்படுத்திக்கொண்டு கூட வாழ்க்கையில் செல்பவர்கள் இருக்கதான் செய்கின்றனர். ஒரே நல்லவனாக இருந்தாலும் இந்த உலகம் அழித்துவிடும் ஒரே கெட்டவனாகவும் இருந்தாலும் அழித்துவிடும். சமநிலையில் நின்றுகூட வெற்றிபெறமுடியும். இதனை எல்லாம் வரும்காலங்களில் நீங்கள் தெரிந்துக்கொள்வீர்கள்.

நல்ல கிரகம் என்ற ஒன்று இருந்தால் தீயகிரகங்களும் இருக்கதானே செய்கின்றது. ஒரு மனிதனில் நல்ல குணங்களும் இருக்க செய்கின்றன தீய குணங்களும் இருக்க செய்கின்றன. இதனை எப்படி ஜாதகத்தின் வழியில் உள்ள கிரகங்களை பயன்படுத்தினால் வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக்கொள்ளலாம் என்பதையும் தெரிந்துக்கொள்ளலாம்.

ஜாதக கதம்பத்தின் சிறப்பு தளத்தில் இணைய விரும்பம் இருப்பவர்கள் என்னை தொடர்புக்கொள்ளுங்கள். முன்கூட்டியே தொடர்புக்கொண்டுவிட்டால் தளத்தை எப்படி அமைக்கலாம் அதில் எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பதை எல்லாம் செய்யலாம்.

நீங்கள் செலுத்தும் கட்டணம் உங்களின் வாழ்வில் நல்ல மாற்றத்தை கண்டிப்பாக செய்யும் என்பது மட்டும் இந்த நேரத்தில் நான் உறுதியளிக்கிறேன்.பதிவுகள் அனைத்தும் பெரிய பதிவாக நிறைய கருத்துக்களை தாங்கி நிற்க்கும் பதிவுகளாக இருக்கும்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: