Followers

Saturday, March 3, 2018

சந்திராஷ்டமம் பரிகாரம்


வணக்கம்!
         ஒருவருக்கு சந்திராஷ்டமம் ஏற்படும் நேரத்தில் அவரின் செயல்பாடு அதிகமாக வெறிதனமாக இருக்கின்றது. அவரின் இதயமும் அதிகமாக வேலை செய்து இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். நாம் வீட்டில் சும்மா உட்கார்ந்து இருந்தாலும் நம்மை தேடி பிரச்சினை வரும் என்பது உங்களுக்கு தெரிந்த விசயம்.

சந்திராஷ்டமம் அன்று எந்த வேலையும் செய்யாமல் வீட்டிலேயே முடங்கி உட்கார்ந்துக்கொண்டு இருக்கமுடியுமா இந்த அவரசஉலகத்தில் அது சாத்தியப்படுமா இதற்கு ஒரு என்ன செய்யலாம் என்று ஒரு நண்பர் கேட்டார்.

சந்திராஷ்டமம் அன்று எல்லோருக்கும் ஒரு கடினமான நாளாக தான் இருக்கின்றது. இந்த நாளில் ஒரு சிலருக்கு நல்லதும் நடைபெற்று இருக்கின்றது. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமான பலனை சந்திராஷ்டம் கொடுக்கின்றது என்பது தான் அனுபத்தில் நான் பார்த்தது.

சந்திராஷ்டமம் என்றாலே பலர் விநாயகர் வழிபாடு செய்தால் போதும். விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைத்துவிட்டு அல்லது சிதறுகாய் உடைத்துவிட்டு அன்றைய நாள் தொடங்கலாம் என்று சொல்லுவார்கள்.

விநாயகர் வழிபாட்டை விட ஆஞ்சநாயர் வழிபாடு மிகுந்த பலனை தருகின்றது. ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினாலே போதுமான ஒன்றாக இருக்கும். எதுவும் நாம் செய்யவேண்டியதில்லை ஆஞ்சநேயரை பார்த்து கும்பிட்டுவிட்டு வந்தால் பெரும்பாலும் அன்றைய நாளில் பிரச்சினை எதுவும் வருவதில்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: