Followers

Sunday, March 4, 2018

ஜாதக அனுபவம்


ணக்கம்!
         ஒருவரின் ஜாதகத்தில் சனிக்கிரகம் பனிரெண்டாவது இடத்தில் இருந்தால் அவர்க்கு உயிர்மேல் அவ்வப்பொழுது பயம் ஏற்படுவது போலவே தோன்றிக்கொண்டு இருக்கும். சனிக்கிரகம் லக்கினத்திற்க்கு பனிரெண்டாவது இடத்தில் அமரும்பொழுது அவரின் லக்கினத்திற்க்கு விரைய வீடு என்பதால் அது உயிரின் பயத்தை ஏற்படுத்தும்.

ஒரு சிலருக்கு ஏதாவது ஒரு வகையில் நோய் வந்துக்கொண்டே இருக்கும். அவர்கள் அடிக்கடி மருத்துமனையில் படுத்துபடுக்கையாக இருக்கவேண்டிய ஒரு சூழ்நிலை அல்லது வருடத்திற்க்கு ஆறு மாதத்திற்க்கு செல்லவேண்டிய ஒன்றை ஏற்படுத்திக்கொடுத்திக்கொண்டே இருக்கும்.

ஒருவரின் அதிக தோல்விக்கும் பனிரெண்டாவது வீடு காரணமாக இருக்கும். எடுக்கின்ற அனைத்தும் தோல்வியை சந்தித்துக்கொண்டே இருப்பது போல வைத்துவிடும். தோல்விக்கு இவரை அடையாளம் காட்டிக்கொள்ளலாம்.

ஒரு சிலருக்கு சனி லக்கினமாக அமர்ந்து பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்தால் அவர் ஒரு முடிவுக்கு வரவே வரமாட்டார். எந்த ஒரு காரியத்திலும் அவர் முடிவு என்பது எடுக்கவே மாட்டார். தப்பித்துக்கொண்டே செல்கிறேன் என்று அவரின் தோல்விக்கு அவரே காரணமாக இருப்பார்.

ஒரு சிலருக்கு திருமணம் நடக்கவே நடக்காது. என்னடா சனி பனிரெண்டாவது வீட்டிற்க்கு செல்வதற்க்கும் திருமணத்திற்க்கும் என்ன காரணம் என்று கேட்கலாம். பலரின் ஜாதகத்தில் இப்படி நடந்துக்கொண்டு இருப்பதால் அதனை சொல்லுகிறேன்.

ஒரு சிலருக்கு திருமணம் நடந்துவிடும் அந்த திருமணத்தால் அவரின் வாழ்க்கை வீணாக போய்விடும். வாழமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். என்னடா காரணம் என்றால் எதுவும் காரணம் இல்லை பிடிக்கவில்லை என்று சொல்லுவார். அவரின் துணை கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பார்.

வாழ்க்கையே போராட்டம் என்று சொல்லுபவர்களின் ஜாதகத்தில் எல்லாம் சனிக்கிரகம் பனிரெண்டாவது வீட்டில் இருந்து தொல்லைக்கொடுத்துக்கொண்டே இருக்கும். எது எடுத்தாலும் அது நஷ்டத்தை தருகின்றது என்றால் உங்களின் ஜாதகத்தில் சனி பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்து இருக்கும்.

ஒரு நல்லது தரக்கூடிய ஒரு கிரகம் விரையத்திற்க்கு செல்லும்பொழுது அனைத்தும் பிரச்சினையை தருகின்றது. மிக சரியான வழிகாட்டுதலை பின்பற்றி தான் இதனை வெற்றிக்கொள்ள முடியும்.

நாளை கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதியில் என்னை சந்திக்கலாம். சந்திக்க விருப்பம் இருப்பவர்கள் என்னை தொடர்புக்கொள்ளவும்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800 

சென்னையில் என்னை சந்திக்க விருப்பம் இருப்பவர்கள் என்னை தொடர்புக்கொள்ளவும். விரைவில் சென்னை வருகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

MP said...

My son has sani in 12 th house ..This makes me worry sir :(