Followers

Friday, March 30, 2018

சிறப்பு பதிவு 4


ணக்கம்!
         முதலில் நாம் எந்த பாதையில் செல்லபோகிறோம் என்று தீர்மானித்துவிடவேண்டும். அதன்பிறகு உங்களின் வாழ்க்கையை அதனை நோக்கி கொண்டு செல்லவேண்டும். எதிர்காலம் என்ற காற்று ஒருவரை எப்படி வேண்டுமானாலும் மாற்றும் சக்தி படைத்தது. எதிர்காலம் மாற்றினாலும் நம்மால் பல ஒரளவு அதனை தீர்மானித்து கொண்டு செல்லமுடியும் என்று நம்பிக்கையை வைக்கவேண்டும்.

முதலில் ஆன்மீகமா அல்லது நாத்திகமாக என்பதை கூட தீர்மானித்துவிடுவது நல்லதாகவே இருக்கும் என்ற பல நண்பர்களிடம் நான் சொன்னது உண்டு. ஒரு சில நண்பர்கள் நாத்திக கருத்தின் சிந்தனையோடு இருப்பார்கள். உங்களுக்குள் என்ன இருக்கின்றதோ அதனை கொண்டு சென்றுவிடுங்கள் என்று சொன்னது உண்டு.

உங்களுக்கு நேரம் சரியில்லை அதனால் தான் உங்களுக்கு திருமணம் நடக்க மாட்டேன்கிறது அல்லது வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் வருகின்றது என்பதை நான் அதிகம் சொல்லுவதில்லை. உங்களின் பொருளாதார வளத்தை எப்படி மேம்படுத்திக்கொள்ளலாம் என்ற ஒரு அடிப்படை சிந்தனையை நிறைய பதிவில் சொல்லிருக்கிறேன்.

இன்றைய காலத்தில் உங்களின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்யாமல் உங்களின் வாழ்க்கை கொண்டு செல்வது என்பது நடக்கவே முடியாத ஒரு காரியமாகவே இருக்கும். பொருளாதார தேவையை பூர்த்தி செய்துவிட்டால் அதன்பிறகு வரும் பிரச்சினை மிக மிக குறைவாகவே இருக்கும்.

முதலில் பொருதாரதேவையை பூர்த்தி செய்துவிட்டு அதன்பிறகு உள்ள விசங்களை பார்த்துக்கொள்ளலாம். ஒரு சோதிடர் சொல்லும் பலனை தவறு என்று சொல்ல ஆயிரம் விதிகள் இருக்கலாம் ஆனால் அதனால் நமக்கு என்ன பயன் என்று பார்க்கவேண்டும். எதுவாக இருந்தாலும் சரி உங்களின் வாழ்க்கைக்கு அது எந்தவிதத்தில் பயன்படும் என்ற நோக்கம் இருந்தால் கண்டிப்பாக உங்களால் எளிதில் ஒரு அற்புதமான வாழ்க்கையை வாழலாம்.

கடந்த பதிவில் அமாவாசைப்பற்றி சொல்லிருந்தேன். அமாவாசையை நாம் எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை தான் சொல்லிருந்தேன். அமாவாசைப்பற்றி விவாதம் செய்தால் அதுவும் அறிவியில் ரீதியில் விவாதம் செய்தால் அது ஆயிரம் பதிவுகளுக்கு மேல் சென்றுவிடும். அதனை செய்வதற்க்கு நம்முடைய வாழ்க்கை கிடையாது. உலகத்தில் உள்ள அனைத்து விசயத்தையும் உங்களின் வாழ்க்கைக்கு எப்படி உதவவைக்கலாம் என்பதை தான் சொல்லுகிறேன்.

ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஜாதககதம்பத்தில் மது குடித்தால் உங்களின் உடலுக்கு நல்லது என்று சொல்லிருக்கிறேன். உண்மையில் எந்த ஒரு ஆன்மீகவாதியும் சரி சோதிடர்களும் சரி இந்த விசயத்தை பொதுவில் சொல்லவே மாட்டார்கள் ஆனால் நான் சொல்லிருந்தேன். தீமையாக இருந்தால் கூட அதில் நன்மை கிடைக்கும் என்றால் கண்டிப்பாக அதனை செய்யுங்கள் என்று சொல்லிவிடுவேன்.

ஒருவர் தேர்ந்தெடுக்கும் பாதை அல்லது தேர்ந்தெடுத்த பாதை சரியா தவறா என்பது சோதிடத்தில் உள்ள பொதுகருத்தை வைத்தே சொல்லிவிடலாம். அவர்களின் ஜாதகத்தை வைத்து மிகச்சரியாக நாம் கணித்து சொல்லிவிடலாம்.

ஒன்றை மட்டும் உங்களிடம் சொல்லுகிறேன் பாருங்கள். சோதிட பொதுவிதியை வைத்து சொல்லுகிறேன். ஒருவருக்கு சுக்கிரதசா நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம் அவர்க்கு அந்த தசாகாலத்தில் அவர் ஒரு வங்கியில் காசாளராக இருந்தால் அவர்க்கு அந்த தசா வீணாகவே செல்லும் என்று சொல்லிவிடலாம்.

சுக்கிரதசா பணபுரள வைக்கும் ஆனால் அந்த பணம் அவருக்கு சொந்தம் கிடையாது அல்லவா. இதுவே அவர்க்கு பணம் வருவது போல ஒரு தொழில் செய்தால் அந்த பணம் அவர்க்கு கிடைக்கும். இந்த இடத்தில் தான் சோதிடத்தின் தேர்ந்தெடுக்கும் விதி வேலை செய்கிறது.

உங்களின் வாழ்க்கையை இப்படி கொண்டு செல்லலாம் என்பதை நிறைய சோதிடகருத்தோடு பதிவில் சொல்லபோகிறேன். அதனை எல்லாம் படித்துவிட்டு நீங்கள் உங்களின் வாழ்க்கையில் அந்த விசயத்தை செலுத்தி பார்க்கலாம்.



பெளர்ணமியைப்பற்றி நாம் கொஞ்சம் பார்க்கலாம். ஒருவர் ஏழ்மையாக இருந்துக்கொண்டு இருந்தால் அவர் பெளர்ணமியை மட்டும் தொடர்ச்சியாக கடைபிடித்து வந்தால் அந்த பெளர்ணமி உங்களுக்கு ஒரு அற்புதமான வாழ்க்கையை கொடுக்கும். பெளர்ணமி அன்று உங்களால் முடிந்தது ஒரு கோவிலை தேர்ந்தெடுத்து பெளர்ணமி நாளில் வலம் வந்துவிடுவது மட்டுமே நீங்கள் செய்யவேண்டியது அது உங்களை உயர்த்தும்.

கோவிலை வலம் வருவதோடு கொஞ்சம் என்னால் செலவு செய்யமுடியும் என்ற ஒரு நம்பிக்கை இருந்தால் உங்களுக்காக நீங்களே ஒரு பூஜையை பெளர்ணமி அன்று உங்களின் வீட்டிலேயே செய்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு தெரிந்த ஒரு பூஜையை செய்துக்கொண்டு வருவது நல்லது.

பெளர்ணமி அன்று கிரகத்தின் சக்தி அதிகமாகவே கிடைக்கும். பெளர்ணமியை தேர்ந்தெடுத்து நீங்கள் ஒரு வழிபாடு அல்லது பூஜையை செய்துவரும்பொழுது உங்களை அது உயர்த்தும். தன்னை ஒழுங்குப்படுத்த அதனை செய்து வந்தால் போதுமானது.

கோவிலுக்கு செல்லமுடியாது வழிபாடு செய்யமுடியாது பூஜையும் செய்யமுடியாது என்று சொல்லுபவர்களும் இருப்பார்கள். பெளர்ணமி அன்று உங்களின் மொட்டைமாடிக்கு சென்று அமைதியாக நிலவை ஒரு அரைநேரம் பார்த்துவிட்டு இருங்கள். நன்றாக ரசித்துவிட்டு வாருங்கள்.

உங்களால் நீர்நிலைகள் இருக்கும் இடத்திற்க்கு செல்லமுடியும் என்றால் அந்த இடத்திற்க்கு சென்று நிலவை இரசியுங்கள். நான் சென்னையில் இருக்கும்பொழுது பெசன்ட்நகர் பீச்சிற்க்கு சென்று பெளர்ணமி அன்று நீண்டநேரம் நிலவையும் கடலையும் இரசித்துவிட்டு வருவேன். ஒரு சில காலங்களுக்கு பிறகு தான் திருவண்ணாமலை சென்று வந்திருக்கிறேன்.

நம்மால் என்ன முடியும் என்பதை தெரிந்துக்கொண்டு அதனை செய்துவிட்டால் போதுமானது. நல்ல பலனை உங்களின் வாழ்க்கையில் வருவதை நீங்களே அனுபவபட வைக்கும். என்ன ஒன்று என்றால் தொடர்ச்சியாக நீங்கள் செய்துவரவேண்டும்.

வளர்பிறையில் நாம் நல்ல தெய்வங்களை எல்லாம் கும்பிட்டு நமக்கு பணம் வருவது போல செய்துக்கொள்ளவேண்டும். தேய்பிறையில் நமக்கு வரும் கர்மாவை போக்கும் வழியை மேற்க்கொள்ளவேண்டும். தேய்பிறையில் கிரகசக்திகளின் நிலை கொஞ்சம் குறைவாக தான் இருக்கும்.

கர்மாவை எடுக்கும் விசயம் என்பது நாம் பூசும் திருநீரு. இந்த திருநீரு தற்பொழுது கடைகளில் வாங்கி நாம் பயன்படுத்துகிறோம் ஆனால் கிராமபுறங்களில் இதனை தயார் செய்துவிட்டு அதனை வைத்து பயன்படுத்துவார்கள். திருநீரு தயார் செய்வது தேய்பிறையில் தான் செய்வார்கள். எல்லாம் ஒரு கணக்கு என்பது இதன் வழியாக தெரியவரும்.

சித்தர்களின் வழிபாடு எல்லாம் அதிகப்பட்சம் பெளர்ணமி அன்று தான் வைத்திருப்பார்கள். இதனை ஏன் அமாவாசை அன்று வைக்கவில்லை என்றால் அவர்கள் பித்ரு உலகத்திற்க்கு செல்லமாட்டார்கள். இந்த பூமியிலேயே தங்கி அவர்கள் இந்த மக்களை காப்பாற்றி வருகின்றனர் என்று சொல்லுவார்கள் அதனால் தான் சித்தர்களுக்கு பெளர்ணமி அன்று வழிபாடு செய்வார்கள். அதிகபட்சம் அனைத்து சித்தர்களுக்கும் பெளர்ணமி வழிபாடு தான் சிறந்த ஒன்று.

அமாவாசை அன்று ஒரு சில அம்மனை தவிர மற்ற தெய்வங்களை கும்பிடுவது கொஞ்சம் நல்லதல்ல தான் ஆனால் பெளர்ணமி அன்று அனைத்தையும் நாம் கும்பிடலாம். அமாவாசை பித்ருக்களுக்கு என்று உள்ளதால் இதனை தவிர்க்க சொல்லுவார்கள்.

பெளர்ணமி வழிபாடு நல்லது தான் அதே நேரத்தில் பெளர்ணமி அன்று எந்த நட்சத்திரம் வருகின்றது என்பதை பார்த்து அதன்பிறகு அந்த வழிபாட்டை மேற்க்கொள்வது நல்லது. ஒரு சில நட்சத்திரம் வரும் நாளில் பெளர்ணமி வந்தால் அது நல்லதல்ல என்று சொல்லுவார்கள்.  பெளர்ணமியை பற்றி பல நல்ல தகவல்களை பிறகு பார்க்கலாம்.

ஜாதககதம்பத்தின் கட்டண சேவை பதிவுக்கு பலர் தங்களை இணைத்துக்கொண்டு வருகின்றனர். உடனே நீங்களும் இணைத்துக்கொள்ளுங்கள்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800  

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: