Followers

Wednesday, March 21, 2018

ஜாதக அனுபவம் :: பூர்வபுண்ணியாதிபதி



வணக்கம்!
          லக்கினாதிபதி நன்றாக இருந்தால் ஒருவருக்கு நல்லவாழ்க்கை அமையும். லக்கினாதிபதிக்கு அடுத்தபடியாக பூர்வபுண்ணியாதிபதி எப்படி இருக்கிறார். பூர்வபுண்ணியம் நன்றாக இருக்கின்றதா என்று பார்த்தால் அவர்க்கு எப்படி வாழ்க்கை அமையும் என்பது தெரியும்.

லக்கினாதிபதி நன்றாக இல்லை என்றாலும் பரவாயில்லை பூர்வபுண்ணியாதிபதி நன்றாக இருந்தால் போதும் அவர் நல்ல முறையில் வாழ்ந்துவிடுவார். பூர்வபுண்ணியம் அந்தளவுக்கு ஒருவர்க்கு உதவி செய்யும்.

பூர்வபுண்ணியம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக அவரின் குலதெய்வம் அவர்க்கு நல்லமுறையில் அருளை வழங்கி அவர்கள் சிறந்த ஒரு வாழ்க்கையை வாழ்வார் என்று சொல்லலாம். பூர்வபுண்ணியம் நன்றாக இருந்தால் அதிர்ஷ்டம் உடையவர் என்று சொல்லலாம். எதனை தொட்டாலும் நன்றாக விளங்கும்.

ஒருவருக்கு அதிர்ஷ்டம் மட்டும் இல்லை என்றால் அவர் எதனை தொட்டாலும் அது தடையை கொடுத்துவிடும். பூர்வபுண்ணியத்திற்க்கு காரகமாக குருவை வைத்தார்கள். குருவின் பார்வையில் பார்வை அல்லது குலதெய்வத்தின் அருள் நம்மீது இருந்தால் நாம் அதிர்ஷ்டக்காரன் என்று சொல்லலாம்.

லக்கினாதிபதியும் அடிப்பட்டு பூர்வபுண்ணியமும் அடிப்பட்டால் நாம் சாபம் தான் வாங்கியிருக்கிறோம் என்று அர்த்தம் கொள்ளவேண்டும். நம்மை வைத்து பிறர் செய்துவிடுவார்கள். அடுத்தவர்களுக்கு அடிமாடாக வேலை செய்யவேண்டிய நிலை உருவாகிவிடும்.

பூர்வபுண்ணியம் நன்றாக இருந்தால் பிரச்சினை இல்லை. பூர்வபுண்ணியம் சரியில்லை என்பவர்கள் ஒரு குருவை நாடி அவர்களின் பார்வையில் நாம் இருந்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டிக்கொள்ளலாம். பூர்வபுண்ணியாதிபதியும் லக்கினாதிபதியும் கெட்டவர்கள் பெரும்பாலும் அடுத்தவர்கள் சொல்லுவதை காதுக்கொடுத்து கேட்டு அதன்படி நடக்கமாட்டார்கள். இது தான் நமது குறை என்று தெரிந்துக்கொண்டு நடந்தால் முன்னேற்றம் கண்டுவிடலாம்.

குருவை நாடமுடியவில்லை என்பவர்கள் அவர் அவர்களின் குலதெய்வத்திற்க்கு மாதந்தோறும் சென்று வாருங்கள். கொஞ்சகாலத்திற்க்கு பிறகு அனைத்தும் சரியாகும். முதலில் கடினமாக இருந்தாலும் கொஞ்சகாலத்திற்க்கு பிறகு நிலைமையை சரியாகிவிடும்.

பூர்வபுண்ணியவாதி செல்லும் நட்சத்திரம் எது என்று கண்டுபிடித்து அந்த நட்சத்திரத்திற்க்கு உரிய தேவதையை வழிபட்டாலும் ஒரளவு சரியாகிவிடும். அவர் அவர்களின் ஜாதகத்தை பார்த்து அதனை முடிவு செய்யவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: