Followers

Monday, July 2, 2018

கடமை


வணக்கம்!
          உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களில் ஒருவர் சரியில்லாமல் போனால் அந்த நபரை போலவே ஒவ்வொரு தலைமுறையிலும் ஒருவர் வீணாக போய்விடுவார். உதாரணத்திற்க்கு ஒருவர் திருமணம் நடக்காமல் இருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம் அவரை போலவே அடுத்ததலைமுறையிலும் ஒருவர் வீணாக போய்விடுவார்.

கடமை என்பதற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். கடமையை செய்வதில் நீங்கள் தவறினாலும் உங்களை நோக்கி அந்த காலம் திரும்பும் காலம் விரைவில் இருக்கின்றது என்று புரிந்துக்கொள்ளவேண்டும். உங்களின் தாய் தந்தையரை நீங்கள் கவனிக்கவேண்டும். தாய் தந்தையரை கவனிக்கவில்லை என்றால் உங்களுக்கும் அது நடக்க ஆரம்பிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும்.

உங்களை செதுக்குவதில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும். உங்களை தயார் செய்தாலே போதும் உங்களின் தலைமுறை அதுவாகவே நல்ல முறையில் உருவாகும். உங்களின் அனைத்து குணங்களையும் மற்றும் உங்களின் திறமைகள் அனைத்தையும் உள்ளது போலவே உங்களின் வாரிசு வரும்.

சோதிடத்தில் உள்ள கிரகங்கள் வேலை செய்வது என்பதை விட உங்களின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிப்பது போலவே உங்களின் வாரிசுகளும் இருக்கும். நான் நிறைய பேர்களிடம் அடிக்கடி பல நல்ல விசயங்களை எல்லாம் சொல்லி அவர்களை நல்லவழிக்கு எல்லாம் கொண்டு வந்து அவர்களை உருவாக்குவதே அவர்களின் வாரிசுகளுக்கு நான் செய்யும் உதவி தான். உங்களை நன்றாக உருவாக்கிவிட்டால் உங்களின் வாரிசு நன்றாக இருக்கும்.

உங்களின் கடமையில் இருக்கும் அனைத்தையும் முடிந்தளவில் நிறைவேற்ற நீங்கள் தயாராகுங்கள். உங்களின் குடும்பமும் உங்களை போலவே பல தலைமுறை உருவாகும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: