Followers

Monday, July 2, 2018

கிரகங்கள் தரும் பயணங்கள்


வணக்கம்!
          உங்களின் இராசிக்கு கோச்சாரபடி சந்திரன் பனிரெண்டாவது வீட்டில் சென்றுக்கொண்டு இருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். அன்று உங்களுக்கு ஒரு நெடுந்தூரம் பயணத்தை ஏற்படுத்திக்கொடுப்பார். 

குறைந்தது 100 கிமீ பயணத்தையாவது சந்திரன் ஏற்படுத்திக்கொடுப்பார். மாதம் ஒருமுறை வரும். வீட்டில் இருப்பவர்களுக்கு இப்படிப்பட்ட அமைப்பு ஏற்றுக்கொள்ளலாம். வீட்டில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக இது நடக்கும்.

தினந்தோறும் அலுவலத்திற்க்கு அதிக கிமீ சென்று வருபவர்களும் இருக்க தான் செய்கின்றனர். இவர்களுக்கு தினந்தோறும் அப்படி பயணம் செய்யவேண்டும் என்று தசா முடிவு செய்து நடத்திக்கொண்டு இருக்கும்.

ஒரு சிலர் பயணம் செல்லும்பொழுது பலவிதமாக மேற்கொள்வார்கள். பயணம் செய்த களைப்பு தெரியாமல் இருக்க அதற்கு தகுந்தார்போல் சொகுசுவாகனங்களை பயன்படுத்துவார்கள். எப்படிப்பட்ட வாகனங்களை பயன்படுத்தி பயணத்தை மேற்க்கொள்கின்றனர் என்பது அவர்களுக்கு நடைபெறும் தசா நாதன் தான் அதிகபட்சம் முடிவு செய்யும்.

தசாநாதன் நன்றாக இருந்தால் அவர்கள் சொகுசுகார்களை பயன்படுத்தலாம். தசாநாதன் சரியில்லை என்றால் மக்களோடு மக்களாக பயணத்தை மேற்க்கொள்ள வைத்துவிடும். சொகுசு குறைவாக இருக்கும். உங்களுக்கு எப்படி பயணம் இருக்கின்றது என்பதை உங்களின் ஜாதகத்தை வைத்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: