Followers

Wednesday, July 25, 2018

ஆரோக்கியம்


வணக்கம்!
          நம்முடைய நண்பர்கள் சொல்லும் கருத்தை வைத்து நான் பார்த்தவரையிலும் சொல்லுகிறேன். புதியதாக திருமணம் ஆன தம்பதிகள் வீட்டில் தற்பொழுது சமைத்து சாப்பிடுவதில்லை. வருகின்ற பெண்கள் அனைத்தும் மூன்று நேரமும் கடையில் ஆர்டர் செய்து சாப்பிடுவதிலேயே இருக்கின்றனர்.

புதியதாக திருமணம் முடிந்து இருக்கும் சமைப்பதற்க்கு தெரியாது என்று விட்டாலும் பல வருடங்கள் இது தொடர் கதையாகவே இருக்கின்றது. பலர் இதனாலேயே அழிந்துக்கொண்டும் வருகின்றனர். இரண்டு பேர் கடையில் சாப்பிடவேண்டும் என்றால் ஒரு நாளை குறைந்தது 500 முதல் 1000 வரை செலவாகும். முப்பது நாட்களும் இப்படியே  என்றால் என்ன செய்வது.

உணவகத்தில் சாப்பிடவேண்டும் என்றால் வாரத்தில் ஒரு நாள் சாப்பிடலாம் இதிலேயே உடல் கெடும். ஒருவர் தொடர்ச்சியாக உணவத்திலேயே சாப்பிடவேண்டும் என்றால் அவர்க்கு கண்டிப்பாக உடல்நிலை கெட்டுவிடும். இதனை ஏன் ஒருவர் தெரிந்தே செய்யவேண்டும்.

ஜாதககதம்பத்தை படிக்கும் அனைவரும் திருமணத்திற்க்கு முன்பு சொல்லும் வார்த்தை இதுவாக இருக்கட்டும். எந்த காரணம் கொண்டும் உணவகத்தில் சாப்பிடகூடாது. வாரம் ஒரு முறை மட்டுமே அனுமதி உண்டு. இதற்கு சம்மதம் என்றால் திருமணம் செய்யலாம் என்று சொல்லுங்கள்.

பல தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போனதற்க்கு இதன் தான் காரணமாக இருக்கின்றது. உணவகத்தில் சாப்பிடும் முறை தயவு செய்து நிறுத்துங்கள். பல வருடங்கள் உணவகத்தில் சாப்பிட்டு எனது உடல்நிலையை கெடுத்துக்கொண்டேன். இதனை சரிசெய்ய என்னால் முடியாமல் இருக்கின்றது. நீங்களாவது நல்ல உடல்நிலையோடு வாழுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: