Followers

Saturday, December 8, 2012

ஆன்மீக அனுபவங்கள் 31



வணக்கம் நண்பர்களே !
                               ஆன்மீக அனுபவத்தில் பிராணாயாமம் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

மனிதனின் எதை வேண்டுமானாலும் செய்யாமல் இருக்கலாம் ஆனால் அவனால் சுவாசிப்பதை மட்டும் நிறுத்தினால் அவனால் உயிர் வாழமுடியாது. மனிதன் சும்மா தான் இருக்கிறேன் என்று சொன்னாலும் அவனின் உடல் இயங்கிக்கொண்டு இருக்கிறது. உடல் இயங்க சுவாசம் தேவை. உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இயங்க மூச்சு தேவை. இந்த மூச்சை தான் பிராணன் என்று சொல்லுகிறார்கள்.

பிராணனை மூச்சுகாற்று, உயிர்சக்தி, வாயு, பிரபஞ்சசக்தி, சுவாசம் என்று பல பேர்களில் அழைக்கிறோம்.  பிராணன் உலகில் அடிப்படை சக்தி. நாம் சுவாசிக்கும் காற்று மூக்கின் வழியாக உட்சென்று நுரையிரலை அடைகிறது. நுரையிலிருந்து உடலுக்கு காற்று கிடைக்கிறது. தேவையற்ற காற்றுகளை வெளியில் அனுப்புகிறது.

உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் சுவாசித்தாலும் மனிதன் மட்டும் அந்த சுவாசத்தை கட்டு்ப்படுத்த முடியும். ஏன் சுவாசத்தை கட்டுப்படுத்த வேண்டும்.பிராயாணமத்தில் அடிப்படையையே மூச்சை கட்டுப்படுத்துதல் தான். நாம் பிறந்தலிருந்து சுவாசத்தை செய்துக்கொண்டு தான் இருக்கிறோம் அதைபோல் மற்ற விலங்குகளும் செய்துக்கொண்டு தான் இருக்கிறது ஆனால் பிராயாணயாமம் செய்யும் போது மூச்சை விடுவதில் ஒழுங்குப்படுத்தப்படுகிறது

மூச்சை ஒழுங்குப்படுத்தும் போது சாதாரணமாக ஒருவன் செய்யும் செயலுக்கும் பிராணாயாமத்தை செய்தவன் செய்யும் செயலுக்கும் வித்தியாசம் ஏற்படுகிறது. 

பிராணாயாமத்தை செய்யாதவர் ஒரு வேலையை செய்தால் அவர் எளிதில் சக்தியை இழந்துவிடுவார் அதையே ஒருவர் பிராணாயாமத்தை செய்பவர் செய்தால் அவர் எளிதில் சக்தியை இழந்துவிட மாட்டார். அவர் செய்வதில் அவ்வளவு தெளிவு இருக்கும். வேலையும் எளிதில் முடியும். நமது உட்ஆற்றல் மற்றும் உடல்ஆற்றலை மேம்படுத்த பிராணாயாமம் தேவை.

இப்பொழுது நீங்கள் நினைக்கலாம் பிராணாயாமம் என்பது வெறும் மூச்சு பயிற்சி தான் என்று நினைக்க தோன்றும். இயல்பான மூச்சில் இருந்து வேறுபடுகிறது. ஒரு கணித நியதியில் இயக்கத்தை நடைபெறவைப்பது ஆகும். கணித நியதியில் நடைபெறும் போது அது ஒழுங்குப்படுத்தப்படுகிறது. 

நீங்கள் இயல்பாக மூச்சை விடுகிறீர்கள். இந்த மூச்சை பிராணாயாமத்தின் மூலம் வகைப்படுத்தும் போது உங்களின் உடல் மிகுந்த சக்தி வாய்ந்த உடலாக மாறுகிறது. உட்ஆற்றல் மேம்படுத்தப்படுகிறது. பிராணாயாமம் என்பது ஆற்றலை பெருக்கும் வித்தை என்று கூறுவார்கள்.

பஞ்சபூதங்களின் கலவைதான் உடல். இந்த கலவைகள் சரியாக இருந்தால் உடல் மூப்பு அடைவதில்லை நோய் வருவதில்லை என்று நமது சித்தர்கள் கண்டறிந்தார்கள். இந்த பஞ்சபூதங்களின் கலவையை உடலில் சரியாக கலப்பதற்க்கு பிராணயாம பயிற்சியில் முடியும் என்று கண்டறிந்து அதனை இந்த உலகிற்க்கு வழங்கினார்கள்.

நம்ம ஆட்கள் என்ன செய்கிறார்கள் அவர்கள் கண்டுபிடித்த வித்தையை விட்டுவிடுவது அதனை செய்து பார்ப்பதில்லை. அவர்களை போய் தரிசனம் செய்துவிடலாம் என்று அங்கு வருகிறார் இங்கு வருகிறார் என்று சொல்லி உங்களை அலைய வைப்பது. உங்களுக்கு இதில் ஏதாவது நன்மை ஏற்படுமா? 

பிராணாயாமம் என்பது அடக்குதல் என்று பொதுவாக ஒரு பெயர்.  ‘பிராணா’ என்றால் உயிர் மூச்சு. ‘யாமா’ என்றால் ஒழுங்குபடுத்துவது. 

பிராணாயாமம் என்பது சுவாசத்தின் இயக்கம் மட்டும் தான் என்று நினைக்க தோன்றும் அப்படி நினைப்பது தவறு சுவாசம் ஒரு படி தான் அடுத்த படிகள் நிறைய உள்ளன. ஒரு சிலர் சுவாசத்தை கட்டுபடுத்துதல் பிராணாயாமம் என்பதை விட நுரையிரலை கட்டுப்படுத்துவது பிராணாயாமம் எனப்படும் என்றும் கூறுவார்கள். 

நாம் தினமும் மூச்சை இழுக்கிறோம் விடுகிறோம். நாம் விடும் மூச்சு நுரையிலின் இயக்கத்தை உண்டு செய்வதில்லை நுரையிரல் செயல்படுவதால் மூச்சை விடுகிறோம் என்பது தான் உண்மை.

நுரையீரலை பிராணனே இயக்குகிறது. பிராணன் நுரையீரலை செயல்படுத்தும்போது பிராணக் காற்று உள்ளிழுக்கபடுவதும் வெளிவிடுவதும் நடைபெறுகின்றது .

நுரையிரலை  இயக்கும் தசை, நரம்பு , ஆகியவைகளை நாம் கட்டுபடுத்த முடியுமானால் அதுவே நாம் பிராணனைக் கட்டுபடுத்துதலும் பிராணயாமம் செய்தலும் ஆகும்.

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: