Followers

Wednesday, December 5, 2012

ராகு-கேது பெயர்ச்சி : கடகம்



வணக்கம் நண்பர்களே !
                    இப்பதிவில் கடகத்தை ராசியாக கொண்டவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி பலனை பார்க்கலாம்

ராகு பலன்கள்

உங்கள் ராசிக்கு ராகு பகவான் ஐந்தாம் வீட்டில் இதுவரை இருந்து வந்தார் இப்பொழுது அவர் உங்களின் ராசிக்கு நான்காவது வீட்டில் பெயர்ச்சியாகி அமர்ந்துள்ளார். தாயின் உடல்நிலையை நன்றாக கவனித்துக்கொள்ளவும். சுகஸ்தானம் என்பதால் உடல்நிலையில் கவனம் தேவை. வானங்களில் செல்லும் போதும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வாகனங்கள் உங்களுக்கு செலவு வைக்கும். வீட்டில் விஷஜந்துக்கள் வருவதற்க்கு வாய்ப்பு இருப்பதால் குப்பைகளை உடனே அகற்றிவிடுங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். கணிணி துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு உயர்பதவி தேடிவரலாம். 

கேதுவின் பலன்கள்

உங்கள் ராசிக்கு பதினொன்ராவது வீட்டில் இருந்து வந்த கேது பகவான் இப்பொழுது அவர் உங்களின் ராசிக்கு பத்தாவது வீட்டில் அமர்ந்துள்ளார். தொழில் வீட்டில் அமர்வதால் புதிய தொழில் வாய்ப்புகள் உங்களை தேடிவரும். தொழிலில் முடிவு எடுக்கும் போது நல்ல ஆலோசனை செய்து முடிவு எடுக்கவேண்டும் அப்படி இல்லை என்றால் ஏதாவது பிரச்சினையில் மாட்டிக்கொள்ளவேண்டும். உறவினர் கைகொடுப்பார்கள் மூத்த சகோதரிடம் இருந்து வந்த பிரச்சினை முடிவுக்கு வரும். வீடு கட்டும் யோகம் வரும்.வியாபாரத்தில் அதிகமான முதலீடுகளை செய்யாதீர்கள்.

நண்பர்களே கோச்சார பலன் என்பது ஒரளவுக்கு தான் நடைபெறும் உங்களின் ஜாதகத்தை பொருத்து பலன்களை தரும் அதனால் நான் சொன்ன பலன்களை போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள். எத்தனை பெரிய சோதனை வந்தாலும் கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை கொள்ளுங்கள் அது உங்களை காப்பாற்றும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: