Followers

Thursday, December 13, 2012

ஆன்மீக அனுபவங்கள் 34



வணக்கம் நண்பர்களே !
                                     ஆன்மீக அனுபவங்கள் தொடரில் பிராணாயாமத்தைப் பற்றி பார்த்து வந்தோம் இப்பதிவில் பிராணாயாமத்தை பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

நீ்ங்கள் பிராணாயாமத்தை படித்துவிட்டு மூச்சை அடக்கவேண்டும் நாமும் ஆன்மீகவாழ்வில் முன்னேற்றம் ஏற்படவேண்டும் என்று நினைத்து இருக்கலாம். மந்திர அனுபவத்திற்க்கு தான் ஒருவரும் தேறவில்லை இதில் யாராவது முன்னேற்றம் அடைகிறார்களா என்று பார்க்கலாம். முதலில் பிரணாயாமத்தைப்பற்றி பார்க்கும் போது பிராணாயாமத்தை செய்யும் அறை எப்படி இருக்க வேண்டும் என்று பார்த்துவிடலாம்.

என்ன நீங்கள் பிராணாயாமத்தை செய்ய அறைகள் வேண்டும் என்று சொல்லுகிறீர்கள் இதில் என்ன அப்படி விசேஷம் இருக்கபோகிறது என்று நினைக்கலாம் என்ன செய்வது நல்ல சூழ்நிலை ஒரு சிலருக்கு தேவைப்படுகிறது அதனால் தான் இதனை சொல்ல வேண்டியிருக்கிறது நீங்கள் பயிற்சியில் தேறிவிட்டால் எந்த இடத்திலும் இதனை செய்யலாம். 

மனிதர்களுக்கு சூழ்நிலை நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். என்னை பார்க்கவருகிறவர்கள் உங்களை பார்த்தால் ஆன்மீகவாதிப் போல் தெரியவில்லை என்று கேட்கிறார்கள் ஆன்மீகவாதி என்றால் காவி வேஷ்டி கழுத்தில் ருத்திரசா கொட்டை நெற்றியில் விபூதி பட்டை என்று ஒரு கோடு வைத்துவிட்டார்கள். இதனை நீங்கள் பார்த்து பார்த்து உங்கள் மனம் இப்படி தான் இருக்க வேண்டும் என்று நம்பிவிட்டது. அதனையை அனைத்து ஆன்மீகவாதிகளிடமும் எதிர்பார்க்கிறது. இப்படி போய் தான் நீங்கள் ஏமாறுவது. 

சரி இந்த கதையை விட்டுவிட்டு சொல்லவந்ததை சொல்லிவிடுவோம். முதலில் நன்றான சூழ்நிலையை உருவாக்கிவிட்டு செய்யுங்கள்.

பிராணாயாமம் செய்ய போகும் அறை கடவுள் தன்மை இருப்பது போல் அதனை நாம் உருவாக்க வேண்டும். இந்த அறை வடக்கு அல்லது வடகிழக்கில் அமைத்தால் மிக நல்லது. நல்ல சூழ்நிலையை உருவாக்கும் விதத்தில் அமைத்தல் நல்லது. எப்படி என்றால் கடவுளின் படங்களை அந்த அறையில் மாட்டிவைக்கலாம். மகான்களின் படங்கள் அப்புறம் சித்தர்களின் படங்களை வைக்கலாம்.

அறை சுத்தமாக இருக்கவேண்டும், சிறு தூசி கூட அறையில் இருக்ககூடாது அறையில் நறுமணம் கமழுவது போல் இருக்கவேண்டும். படங்களுக்கு தினமும் பூ போடுங்கள். நறுமணம் வரும் மாதிரி சாம்பிராணி எல்லாம் போடுங்கள். சந்தனம் வையுங்கள் சந்தனத்தில் ஜவ்வாது கலந்து வையுங்கள் நன்றாக மணக்கும்.

அறையில் தேவையற்ற நபர்களை உள்ளே அனுமதிக்காதீர்கள். அதைபோல் உள்ளே நீங்கள் செல்போனை உபயோகப்படுத்தாதீர்கள். நீங்கள் உள்ளே செல்லும்போது கூட நல்ல மனதோடு உள்ளே செல்லவேண்டும். தேவையற்ற கற்பனைகள் இருக்ககூடாது அதைபோல் ஆசையும் வெறுப்பும் மனதில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எப்படி இது சாத்தியப்படும் முதலில் தேவையற்ற விசயம் வருவது இயல்பு தான் போக போக சரியாகிவிடும்.

நீங்கள் இளைஞராக இருந்து இந்த மாதிரி அறையை உருவாக்கினால் உங்களை வீட்டில் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள் இவனுக்கு ஏதோ ஆகிவிட்டது இப்படி இவன் இருக்ககூடாது என்று உங்கள் பெற்றோர்கள் நினைப்பார்கள். பெற்றோர்கள் இருக்கிறார்களே நல்லவனாகவும் இருக்கவிடமாட்டார்கள் கெட்டவனாகவும் இருக்கவிடமாட்டார்கள். இவன் சாமியாராக மாறபோகிறான் என்று கற்பனை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். 

இப்படி எல்லாம் அவர்கள் சொன்னால் நீங்கள் சொல்லுங்கள் நன்றாக சாமி கும்பிட்டால் நமக்கு தான் ஆதாயம் நல்ல வாழ்க்கை அமைத்துக்கொள்ளலாம் அதிகநாட்கள் வாழலாம் என்று சொல்லுங்கள் அதனுடன் இந்த மதத்தில் சாமியாராக யாரையும் போகசொல்லவில்லை என்றும் சொல்லுங்கள். மனிதர்கள் சாமியாராகதான் மாறி ஆன்மீகத்தை தேடவேண்டும் என்று சொன்னால் பகவத்கீதை ஏன் இல்லறத்தில் இருப்பவனுக்கு உபதேசிக்கப்பட்டது என்று உங்களின் பெற்றோர்களிடம் சொல்லி அறையை உருவாக்குங்கள். செய்வீர்களா நண்பர்களே. நன்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

கார்த்திக் சரவணன் said...

நல்ல பகிர்வு.. தற்கால இளைஞர்கள் தொடர வேண்டிய விஷயம்.. நன்றி...

rajeshsubbu said...

//*ஸ்கூல் பையன் said...
நல்ல பகிர்வு.. தற்கால இளைஞர்கள் தொடர வேண்டிய விஷயம்.. நன்றி...*//
வணக்கம் நண்பரே இளைஞர்களுக்காக தான் இத்தொடரை எழுதுகிறேன் நன்றி