Followers

Monday, December 10, 2012

ஆன்மீக அனுபவங்கள் 32


வணக்கம் நண்பர்களே !
                                         ஆன்மீக அனுபவத்தில் பிராணாயாமத்தைப்பற்றி கடந்த பதிவில் எழுதியிருந்தேன். மூச்சை அடக்குவதால் என்ன நன்மை ஏற்படுகிறது என்று ஒரு நண்பர் கேட்டு இருந்தார்.

மூச்சை குறைவாகவும் மெதுவாகவும் விடும் உயிர் இனங்களுக்கு சராசரி ஆயுள்காலங்கள் விட ஆயுட்காலம் அதிகம்.

முயல் 1 நிமிடத்திற்க்கு 38 தடவை மூச்சை விடுகிறது. ஆமை 1 நிமிடத்திற்க்கு 5 தடவை மூச்சை விடுகிறது. முயல்களின் ஆயுட்காலம் 8 ஆண்டுகள் தான், ஆமைகளின் ஆயுட்காலம் சராசரியாக 155 ஆண்டுகள், திமிங்கலத்தின் ஆயுட்காலம் 500 ஆண்டுகள்.

திமிங்கலம் நம்மைபோல் நுரையீரலைக் கொண்டிருப்பதால் எப்பொழுதெல்லாம் சுவாசிக்க வேண்டுமோ அப்பொழுதெல்லாம் நீரின் மேற்பரப்புக்கு வந்து காற்றை அதன் மூக்கு வழியாக உள்ளிழுத்துச் செல்லும். திமிங்கிலங்கலங்களின் நுரையீரல் மிகவும் பெரியதாகும். அவை நீரின் மேல்மட்டத்திற்கு வரும்போது தேவையான அளவு காற்றை, தலைப்பகுதியில் அமைந்துள்ள மூக்கின் வழியாக உள்ளிழுத்துக் கொண்டு நீரில் மூழ்குகின்றன.

மனிதன் சுவாசிக்கும் போது 15 சதவீத ஆக்ஸிஜனை மட்டுமே நுரையீரல் எடுத்துக்கொள்கிறது. திமிங்கலம் ஒருமுறை சுவாசிக்கும் போது ஆக்ஸிஜன் 90 சதவீதம் ஆக்ஸிஜனை எடுத்து்க்கொள்ளும்.

ஒரு திமிங்கிலம் நீரின் அடியில் மூழ்கும் போது அதன் இரத்த ஓட்ட அளவு, இதயத் துடிப்பு மற்றும் ஆக்ஸிஜன் உபயோகப்படுத்துவது கணிசமான அளவு குறைகிறது.  ஒருமுறை காற்றை நுரையீரலில் நிரப்பிக்கொண்டு திமிங்கிலங்கள் 7,000 அடி வரை நீரின் ஆழத்திற்கு சென்று இரை தேடும் வல்லமை பெற்றவை.

மனிதன் சராசரியாக 1 நிமிடத்திற்க்கு 18 முறை சுவாசிக்கிறான். இந்த சுவாசத்தை பாதியாக குறைத்தாலே மனிதனின் வாழ்நாட்கள் இரடிப்பாகும். மனிதன் கோபபடும்போது அவன் அதிகமாக சுவாசிக்கிறான் அதனால் அவனின் உடல் நிலை நோய்வாய்ப்படுகிறது.

நாம் உள்ளிழுக்கும் காற்று மூன்றில் ஒரு பங்கு தான் நுரையீரலை நிரப்புகிறது. மூச்சுபயிற்சியால் நுரையீரல் முழுவதும் நிரப்பினால்  நமது உடல் புத்துணர்ச்சி பெறும். 

பிராணாயாமத்தால் நமது உடல் வயது ஏற ஏற இளமை தோற்றத்தில் தான் இருக்கும். மனதும் தெம்புடன் தான் இருக்கும்.

நமது மூச்சை அடக்கினால் நன்மை ஏற்படுகிறது என்று தெரிகிறது அதனால் தான் நமது ஆன்மீக பெரியவர்கள் மூச்சை அடக்குபவனை முனிவர்கள் என்று சொன்னார்கள்

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


2 comments:

raja said...

நல்ல பதிவு....

சுவாசத்தை கட்டுபடுத்திய பல உயிரினங்கள் 500 வருடத்துக்கு மேலும் உயிர் வாழ்கின்றது......உதாரணத்துக்கு சில கடல் வாழ் பாம்பு உயிரினங்களை சொல்லலாம்.....

rajeshsubbu said...

/* raja said...
நல்ல பதிவு....

சுவாசத்தை கட்டுபடுத்திய பல உயிரினங்கள் 500 வருடத்துக்கு மேலும் உயிர் வாழ்கின்றது......உதாரணத்துக்கு சில கடல் வாழ் பாம்பு உயிரினங்களை சொல்லலாம்.....*/

தகவலுக்கு நன்றி நண்பரே