Followers

Friday, December 7, 2012

ராகு-கேது பெயர்ச்சி : ரிஷபம்



வணக்கம் நண்பர்களே !
                                        இப்பதிவில் ரிஷபத்தை ராசியாக கொண்டவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி பலனை பார்க்கலாம். 

ராகுவின் பலன்கள்

உங்களின் ராசிக்கு ஏழில் அமர்ந்திருந்த ராகு பகவான் தற்பொழுது ஆறாம் வீட்டிற்க்கு பெயர்ச்சியாகி அமர்ந்துள்ளார். இதுவரை துணைவியருடன் இருந்து வந்த பிணக்கு விலகிவிடும். உங்களின் துணைவரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்களை யார் எதிர்த்தாலும் அவர்களை எளிதில் வெல்வீர்கள். அரசியல் வாழ்வு சிறக்கும். கடன்களை அடைப்பதற்க்கும் வழிகள் பிறக்கும் அதேபோல் கேட்ட இடத்தில் பணம் உங்களின் கைக்கு வரும். இதுநாள் வரை வேலை இல்லாமல் இருந்து வந்தால் உங்களுக்கு வேலை கிடைக்கும். தொழில்களிலும் புதிய வாய்ப்புகள் தேடிவரும்.

கேதுவின் பலன்கள்

உங்களின் ராசியில் இருந்து வந்த கேது பகவான் தற்பொழுது பெயர்ச்சியாகி பனிரெண்டாவது வீட்டில் அமரந்துள்ளார். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு வரும். பல ஆன்மீகஸ்தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு உருவாகும். ஆன்மீக தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பு உருவாகும். சில பேருக்கு மருத்துவசெலவுகள் ஏற்படலாம் அதனால் உடல்நிலையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனே மருத்துவரை சந்திப்பது சிறந்தது. பிள்ளைகளின் வழியாக சுபசெலவுகள் ஏற்படலாம். 


நண்பர்களே கோச்சார பலன் என்பது ஒரளவுக்கு தான் நடைபெறும் உங்களின் ஜாதகத்தை பொருத்து பலன்களை தரும் அதனால் நான் சொன்ன பலன்களை போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள். எத்தனை பெரிய சோதனை வந்தாலும் கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை கொள்ளுங்கள் அது உங்களை காப்பாற்றும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.



2 comments:

M. Shanmugam said...

பல குறிப்புகள் அப்படியே நடக்கிறது.
மிக்க நன்றி.


Tamil Newspaper

rajeshsubbu said...

வருக வணக்கம் M. Shanmugam தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நனறி