Followers

Wednesday, December 26, 2012

காக்கும் குலதெய்வம்



வணக்கம் நண்பர்களே !
                              குலதெய்வத்தைப்பற்றி ஒரு பதிவு போட்டவுடன் அதனைப்படித்து விட்டு பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு கேட்டார்கள் எப்படி குலதெய்வத்தின் அருளை பெறுவது என்று அவர்களுக்கு சொல்லியுள்ளேன். இந்த பதிவிலும் குலதெய்வத்தைப்பற்றி பார்க்கலாம்.

இன்றைய தேதியில் நீங்கள் ஆன்மீக புத்தகங்களை வாங்கினால் அதில் பல மந்திரங்களின் பயிற்சி தான் போட்டு உள்ளார்கள். தினசரி நாளிதழ் கூட இதே கதை தான் நடந்துள்ளது. அதனை செய்பவர்கள் ஏதாவது நன்மை அடைகிறார்களா என்று பார்ப்பேன்.

அவர்கள் அடைவது ஒன்றுமே இல்லை என்று தான் அர்த்தம் ஏன் நடைபெறவில்லை என்ன காரணத்தால் அந்த தெய்வங்களின் தரிசனம் நமக்கு கிடைக்கவில்லை என்று பார்த்தால் ஒரே காரணம் ஒன்று உள்ளது. அது குலதெய்வம் அதனை தடுத்துவிடும் எப்படி என்று பார்ப்போம்.

உங்களுக்கு குலதெய்வம் அருள் இல்லை என்றாலும் உங்களை காப்பாற்றும் பொறுப்பு அந்த குலதெய்வத்திற்க்கு இருக்கிறது. உங்களின் வீட்டில் நான்கு பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் அவர்களின் ஜாதகங்களில் பூர்வபுண்ணியம் மூன்று பேருக்கு கெட்டு ஒருவருக்கு நன்றாக இருந்தாலும் உங்களின் குலதெய்வம் உங்களை காப்பாற்றிவிடும்.  

நாம் எந்த மந்திரபயிற்சி பெற்றாலும் குலதெய்வத்தினிடம் செல்லும்போது நீங்கள் எடுத்த இஷ்டதெய்வம் உங்களின் குலதெய்வத்திடம் வராது. இது நியதி. நீங்கள் மந்திர பயிற்சி செய்யும் போது முறையான அனுமதி உங்களின் குலதெய்வத்திடம் வாங்கவேண்டும். 

நீங்கள் மந்திர பயிற்சி செய்து கொண்டு இருப்பீர்கள் உங்களின் குலதெய்வம் அனுமதியிருந்தால் மட்டுமே உள்ளே உங்களின் இஷ்டதெய்வம் வரமுடியும் அப்படி இல்லை என்றால் உள்ளே அனுமதி இல்லை. நீங்கள் மந்திரபயிற்சியை 108 நாட்கள் செய்துக்கொண்டு என்னடா ஒன்றுமே நடைபெறவில்லை என்று பார்த்துக்கொண்டு இருப்பீர்கள் உங்களின் குலதெய்வம் அதனை உள்ளே விடாது ஏன் அப்படி என்று பார்த்தால். நியதி என்ன என்றால் எந்த தெய்வமும் உங்களின் குலதெய்வதின் வழியாக தான் உள்ளே வரமுடியும். குலதெய்வம் அனுமதி கொடுத்தால் தான் இஷ்டதெய்வம் வரமுடியும். 

நீங்கள் செய்யும் மந்திரங்களுக்கு முறையாக அனுமதியை உங்களின் குலதெய்வத்திடம் நீங்கள் வாங்கவில்லை அதனால் உங்களின் மந்திரங்கள் வேலை செய்யவில்லை என்று அர்த்தம். என்னிடம் மந்திரபயிற்சி பெற நினைப்பவர்களிடம் நான் கேட்கும் முதல் கேள்வி இதுவாக தான் இருக்கும் உங்களின் குலதெய்வம் என்ன என்று தான் இருக்கும். அவர்கள் என்னை பார்த்து சென்றவுடன் அவர்களின் குலதெய்வதிடம் அனுமதி வாங்கவேண்டும் .

அனுமதி வாங்கிறது என்று சொன்னால் சும்மா மந்திர பயிற்சி இவர்களுக்கு கற்றுக்கொடுக்கபோகிறேன் என்று சொல்லமுடியாது. அதற்கு என்று பல வழிகள் இருக்கிறது அப்படி செய்து தான் நான் தரமுடியும். உங்களின் குலதெய்வத்திடம் நான் அனுமதி வாங்கும்போது என்னால் எந்தவித சிறிய தீங்கும் உன் பிள்ளைகளுக்கு நடக்காது என்று உறுதி அளித்தபிறகு தான் மந்திரத்தை வழங்கமுடியும்.

உங்களின் குலதெய்வத்திடம் நான் அனுமதி வாங்குவதற்க்குள் பாடாத பாடு நான் படவேண்டியிருக்கும். அவ்வளவு எளிதில் அனுமதி கொடுத்துவிடாது. இப்படி கஷ்டபட்டு நான் அனுமதி வாங்குவேன். இவன் என்ன சொல்லுவான் நான் இப்பொழுது செய்யவில்லை சார் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்பார். எனக்கு எப்படி இருக்கும் அவனின் கர்மா அவனை தடுக்கிறது என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளவேண்டியது தான்.

இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் உங்களின் குலதெய்வம் தான் உங்களுக்கு எல்லாம். எமன் கூட உங்கள் குலதெய்வத்தின் அனுமதி பேரில் தான் வருவார்.

பல வித மந்திரங்களை ஒவ்வொரு நாளும் நீங்கள் உரு ஏற்றிக்கொண்டே இருக்கிறீர்கள் ஆனால் பலன் ஒன்றுமே நடைபெறவில்லை என்றால் அதற்கு ஒரே அர்த்தம் உங்களின் குலதெய்வத்திடம் அனுமதி இல்லை. அதனால் உங்களின் மந்திரங்கள் வெற்றி அடைவதில்லை.

மந்திரங்களுக்கு மட்டும் இல்லை நீங்கள் செய்கின்ற அனைத்து செயலுக்கும் குலதெய்வம் இல்லை என்றால் ஒன்றும் வெற்றிபெறாது என்பதை நீங்கள் நினையுங்கள்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  


2 comments:

sri said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ஐயா குலதேவத்திடம் அனுமதி பெறுவது எப்படி? தயவு செய்து விளக்கமாக சொல்வீர்களா?

pathmanathan said...

நான் இலங்கையில் இருக்கிறேன், குலதேவதை நான் எப்படி கண்டுபிடிப்பது , இங்கு குலதெய்வ வழிபாடு பெரிதாக இல்லாததால் எப்படி கண்டு பிடிப்பது என்பது கஷ்டமாக இருக்கிறது ,உதவுங்கள்