Followers

Saturday, December 29, 2012

சக்தி மயம்



வணக்கம் நண்பர்களே!

                    இன்றைய தேதி வரைக்கும் எனக்கு வந்த மந்திர பயிற்சி மெயில்களில் 75 சதவீதம் பெண்களிடம் இருந்து வந்துள்ளது. நான் முதலில் நினைத்து இருந்தேன். பெண்களுக்கு சொல்லிதருவது முடியாத காரியம் என்று நினைத்து வைத்திருந்தேன். இப்பொழுது அதனை மாற்றி இவர்களுக்கும் கற்று கொடுத்துவிடலாம் என்று முடிவு எடுத்துவிட்டேன். 

ஆண்களை விட பெண்கள் எல்லா துறையிலும் முன்னேறிவிட்டார்கள் ஆனால் ஆன்மீகத்தில் அந்தளவுக்கு வரவில்லை என்று நினைத்தது தவறு. எனக்கு வரும் மெயில்களில் இருந்து தெரிகிறது ஆன்மீகத்திலும் உச்சத்தை தொட்டுவிடுவார்கள். 

பெண்களை ஏன் ஆன்மீகத்தில் ஒதுக்கி வைத்திருப்பார்கள் என்று நினைத்த போதுபண்டைகாலங்களில் வேட்டை தான் தொழிலாக இருந்து வந்தது. அப்பொழுது ஆண் பெண் இருவரும் வேட்டையாட சென்று இருப்பார்கள். இவர்களை கண்டு மிருகங்கள் தாக்கி இருக்கும் அப்பொழுது நினைத்து இருப்பார்கள்.

ஏன் நாம் பதுங்கி தானே வேட்டையாடிகிறோம் எப்படி நம்மை தாக்கிறது என்று யோசித்தபோது அந்த பெண்னக்கு அந்த நேரத்தில் மாதாந்திர நாள் வந்து இருக்கும். இவள் உடலில் இருந்து இரத்தம் வரவும் போது இவர்கள் பதுங்கி வேட்டையாடினாலும் இவர்களின் இரத்த வாடையை பார்த்து விலங்குகள் தாக்கி இருக்கும். அதனை தெரியாமல் பெண்கள் வந்தால் வேட்டையாட முடியாது என்று நினைத்து ஒதுக்கி இருக்கார்கள் அது அப்படியே தொன்று தொட்டு நடந்து வருகிறது. அதனை ஆன்மீகவிசயத்திலும் பார்க்க ஆரம்பித்து இருப்பார்கள். அந்த காலத்தில் கோவில்கள் பெரும்பாலும் காடுகளில் தான் இருந்து இருக்கிறது.  இது தான் காரணம் என்று நான் நினைக்கிறேன்

பெண்களை முதலில் ஒதுக்கி வைத்தது ஆதிமனிதனாக தான் இருக்கும். ஏன் இப்பொழுது ஒதுக்க வேண்டும் அது தான் தெரிந்துவிட்டதே அவர்களுக்கும் அனைத்தும் கொடுத்துவிடவேண்டியது தான். எந்த கடவுள் புத்தி கொடுத்தாரே தெரியவில்லை எதைச்சயாக நான் முதலில் ஒரு பெண்ணுக்கு தான் கொடுத்தேன். இல்லை என்றால் இந்த விசயத்தில் கர்மவினை என்ன பிடித்துக்கொண்டு இருக்கும்.

உலகே சக்தி மயம் அந்த சக்திதான். அனைவரும் சக்தியின் குழந்தைகள் தான் என்று நினைத்து சரிசமமாக கொடுத்துவிடவேண்டியது தான். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: