Followers

Friday, December 14, 2012

கைவல்ய உபநிஷதம்



வணக்கம் நண்பர்களே !
                                 உபநிஷதம் பதிவு எழுதி நாட்கள் அதிகமாகிவிட்டதால் இப்பதிவில் கைவல்ய உபநிஷதம் என்ற உபநிஷத்தைப்பற்றி எழுதுகிறேன்.

கைவல்ய உபநிஷதம் அதர்வ வேதத்தை சேர்ந்த ஒன்றாகும். இந்த உபநீஷத்தில் ஆஷ்பலாயனர் என்ற ஒரு மாணவருக்கும் அவருடைய குருவிற்க்கு நடப்பதை கைவல்ய உபநிஷத்தில் இருக்கின்றன.

ஆஷ்பலாயனர் தன் குருவிடம் எனக்கு பிரம்ம ஞானத்தை உபதேசியுங்கள் என்று கேட்பார் அதற்கு குரு சொல்லுவார்.

முதலில் உன் குருவினிடமும் புனித புத்தகங்களிலும் உள்ள சொற்களை நீ நம்பிக்கை கொள்ளவேண்டும். நாம் என்ன செய்வோம் புத்தகங்களில் உள்ள விசயத்தை எடுத்துக்கொண்டு என்ன செய்வது யாராது அனைத்தையும் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று நினைப்போம் இப்பொழுது யாரும் புத்தகங்களை படிப்பதில்லை அதற்கு ஏன் வீண் செலவு வீணான நேரத்தை ஒதுக்குவது என்று நினைக்கிறோம். நீங்கள் எந்தளவுக்கு புத்தகம் படிப்பதற்க்கு நேரம் ஒதுக்கிறீர்களோ அந்தளவுக்கு நீங்கள் உயரலாம்.

புத்தகங்களின் உள்ள சொற்களின் மீது நம்பிக்கை வைத்து அந்த நம்பிக்கையோடு பிரம்மத்தை நாடு. இடைவிடாது அவனையே நீ தியானம் செய்யவேண்டும். பிரம்மத்தின் மீது கொண்ட அன்பாலும் உலகின் மீது பற்றுக்கொள்ளாமையாலும் ஒருவன் அமரத்துவம் அடைகிறான். மனிதன் அறிய வேண்டியது அழிவில்லாப் பெரு வாழ்வே. தூய்மை காக்கும் விரதங்களும் முடிவில்லா மத சடங்குகளும் வேள்வியும் பிராத்தனைகளும் தீர்த்தயாத்திரைகளும் உண்மையின் அறிவொளி எய்தா வரைதான்.

நான் எனது என்ற எண்ணத்தால் ஆத்மா கட்டுண்டிருக்கிறது மனம் ஒளி பெறும் நிலைக்கும் உயரும் போது அது ஒருபொதும் இருமை உணர்வெய்துவதில்லை. எப்பொழுது தேடுகிறவன் ஒளிநிறை உயரநிலையை அடைகிறானோ அப்பொழுது அவன் உன்னதபெருநிலையை அடைகிறான். அவன் மனம் எங்ச் செல்லினும் அங்கு உன்னதப பெருநிலையே மிளிர்ந்திலங்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: