வணக்கம்!
ராகு கேது நான்கில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். ஏற்கனவே பலமுறை நான் இதனைப்பற்றி சொல்லிருக்கிறேன் இருந்தாலும் மீண்டும் இதனைப்பற்றி பார்க்கலாம்.
ராகு கேது நான்கில் இருந்தால் பெரும்பாலும் குடும்பத்தில் உள்ளவர்கள் தனித்தனியாக சென்றுவிடுவார்கள். ஒரு குடும்பத்தில் உள்ளவர்களில் அனைவரும் அறிவாளியாக இருந்தால் என்ன நடக்கும். அவன் அவன் சிந்தித்து நடந்தால் அவன் அவன் தனி தனியாக சென்றுவிடுவான்.
ஒரு சிலருக்கு இதுவே கணவன் மனைவியை பிரித்துவிடுவதும் உண்டு. கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு வந்து நீ என்ன சொல்லுவது நான் என்ன கேட்பது என்று இருப்பார்கள். அவர்கள் அவர்கள் முடிவு எடுத்து குடும்பம் வீணாக போய்விடும்.
பொதுவான ஒரு பலன் என்ன என்றால் இந்த அமைப்பில் இருந்தால் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்பார்கள். இப்படி இருந்தால் நீங்களும் பரிகாரம் செய்யலாம்.
பரிகாரம் செய்யவேண்டும் என்றவுடன் உடனே வந்துவிடவேண்டாம். உங்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் சண்டை சச்சரவோடு இருந்தால் நீங்கள் இந்த பரிகாரத்தில் இணையலாம். சண்டை சச்சரவு இல்லை என்றால் விட்டுவிடுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment