Followers

Monday, December 19, 2016

சந்திரனும் மழையும்


வணக்கம்!
          எனக்கு தெரிந்த நாளில் இருந்து இந்த வருடம் தான் தஞ்சாவூர் பகுதியில் ஒரு குளத்தில் கூட தண்ணீர் இல்லை. ஒரு குளமும் தண்ணீரால் நிரம்பவில்லை. காவிரியிலும் தண்ணீர் வரவில்லை மழையும் இல்லை. நிறைய இடத்தில் தற்பொழுது மழைக்காக கூட்டு பிராத்தனை நடைபெறுகிறது. 

சோதிடத்தில் இந்த வருடம் நிறைய மழை என்று நமது சோதிடர்கள் எல்லாம் சொன்னார்கள். தஞ்சாவூர் பகுதியில் மழை இல்லை. இனி மழை வந்தாலும் லாபம் கிடையாது. மழை என்றவுடன் சோதிடத்தில் ஒன்றை சொல்லவேண்டும் என்பதற்க்காக தான் இதனை எழுத ஆரம்பித்தேன். 

சந்திரன் சோதிடத்திற்க்கு மிக மிக முக்கியம். ஒரு தமிழ்மாதத்தில் முதல் நாள் மழை பெய்தால் அந்த மாதம் முழுவதும் மழை இருக்காது. அஷ்டமி ஏகாதசி திருவாதிரை அன்று மழை வருவதுபோல் காட்டும் மாதததிற்க்கு தகுந்தமாதிரி அந்த நாளில் மழையும் பெய்யும்.

அமாவாசை பெளர்ணமி நாட்களிலும் மாதத்திற்க்கு தகுந்தமாதிரி மழை இருக்கும். வளர்பிறை நாட்களை விட தேய்பிறை நாட்களில் தான் மழை அதிகமாக இருக்கும்.  

ஒரு புயல் வளர்பிறை நாளில் உருவாகினால் காற்று மட்டுமே அடிக்கும் அதிக மழை இருக்காது. தேய்பிறை நாளில் புயல் உருவாகினால் அதிக மழை இருக்கும். நல்ல மனிதனின் பிராத்தனையிலும் மழை இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: