Followers

Thursday, December 22, 2016

சாப தோஷம்


வணக்கம்!
          ராகு கேது பரிகாரம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. எப்படியும் இந்த வாரம் அனைவருக்கும் முடித்துவிடலாம். இந்த பரிகாரத்தால் தான் பதிவுகளை அதிகம் உங்களுக்கு தரமுடியவில்லை முடிந்தவரை நிறைய பதிவுகள் இட முயற்சிக்கிறேன்.

குரு கிரகம் உங்களுக்கு கெடுதல் தரும் நிலையில் இருந்தால் உங்களுக்கு பிறர் சாபம் இடுவார்கள். சாபதோஷம் இருக்கின்றது இந்த தோஷத்தாலும் பாதிப்பு அதிகம் இருக்கின்றது. எதுவும் நமக்கு நன்றாக அமையவில்லை நிறைய தோல்விகள் ஏற்படுகின்றது என்பவர்களுக்கு எல்லாம் இந்த சாபதோஷம் இருக்கின்றது என்று அர்த்தம்.

குரு கிரகம் உங்களுக்கு கெட்டாலே இந்த தோஷம் உங்களின் பரம்பரையில் இருந்து வந்திருக்கின்றது என்று அர்த்தம் கொள்ளவேண்டும். உங்களின் பரம்பரையில் இருந்தவர்கள் யாரோ சாபத்தை வாங்கியிருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு சிலருக்கு அவர்களின் முன்ஜென்மத்தில் இப்படிப்பட்ட சாபத்தை வாங்கிக்கொண்டு வந்திருக்கலாம். முன்ஜென்மத்தில் சாபத்தை வாங்கியிருந்தால் அவர்களின் ஜாதகத்தில் குரு கிரகம் எட்டில் அமைந்து இருக்கும்.

நீங்களும் பிறர்க்கு சாபம் இடவேண்டாம். இது கிராமபகுதியில் அதிகமாக இருக்கும். தற்பொழுது சாபம் இடுவது நகர்புறத்திலும் இருக்கின்றது. அடுத்தவர்களை திட்டவும் வேண்டாம் அதிகமாக பேசவும் வேண்டாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

KJ said...

Sir, Thanusu Lagnathirku 8il than Avar Ucham aagirar.Atharku Vithi vilaku unda??