வணக்கம்!
நண்பர் ஒருவர் கேள்வி ஒன்றை அனுப்பியிருந்தார். வெறும் கிரகங்கள் அமர்ந்திருப்பதை மட்டுமே சொல்லிருக்கின்றீர்கள் மேலும் பல தகவல்களை சொல்லலாமே என்று இருந்தது.
கிரகங்கள் அமர்ந்தை வைத்தும் மற்றும் நட்சத்திரங்களை வைத்தும் பார்த்து சொன்னாலே போதும். அதனை தாண்டி நாம் பார்த்துக்கொண்டு இருப்பதில்லை. ஒரு சிலர் அதனை எல்லாம் பார்த்தாலும் அந்தளவுக்கு நாம் பலனை பார்த்து ஒன்றும் நடக்கபோவதில்லை.
முற்காலத்தில் நான் சொல்லுவதை வைத்தே அனைத்து பலனையும் நிர்ணயம் செய்தார்கள். அதனை வைத்து தான் நான் பலன் சொல்லுகிறேன். சோதிடத்தை நீங்கள் இந்தளவுக்கு பார்த்தாலே போதும். பெரிய ஆராய்ச்சி செய்து நாம் ஒன்றும் செய்யபோவதில்லை.
நீங்கள் படித்துக்கொண்டே இருந்தால் நிறைய படிக்கலாம். வாழ்க்கை முழுவதும் இதனை படித்துக்கொண்டே இருக்கலாம். நம்முடைய வேலை இதனை படிப்பது கிடையாது. இதனை வைத்து நம்ம வாழ்க்கை தரத்தை எப்படி மேம்படுத்திக்கொள்வது எப்படி என்று தான் பார்க்கவேண்டும்.
சோதிடம் மட்டும் கிடையாது உலகத்தில் இருக்கின்ற அனைத்து படிப்பும் இப்படி தான் இருக்கவேண்டும். நம்ம வாழ்க்கைக்கு பயன்படுகின்றது என்றால் அதனை எடுத்துக்கொள்ளவேண்டும் இல்லை என்றால் அதனை விட்டுவிடவேண்டும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment