Followers

Monday, December 12, 2016

VVIP Pooja


வணக்கம்!
          நமது ஜாதககதம்பத்தை பிற மதத்தினர் அதிகம் படிப்பார்கள். அவர்கள் வருடந்தோறும் ஒரு தொகையை செலுத்தி அவர்களுக்கு தேவையான பூஜைகளை மாதந்தோறும் நடத்த சொல்லுவார்கள். நானும் அவர்களுக்கு மாதந்தோறும் பூஜைகளை செய்து அவர்களுக்கு வாட்ஸ்அப் அல்லது மெயிலில் பூஜை மற்றும் ஹோம படங்களை அனுப்பி வைத்து வருகிறேன்.

இவர்கள் அனைவரும் இந்த டிசம்பர் மற்றும் ஜனவரி 15 க்குள் அவர்களுக்கான தொகையை செலுத்திவிடுவார்கள். ஒரு சிலர் தற்பொழுது செலுத்திவிட்டனர். இன்னமும் செலுத்தாவர்கள் அந்த தொகையை செலுத்தலாம்.

இப்படி நடைபெறுவதை ஜாதககதம்பத்தில் சொல்லாமல் இருந்துவந்தேன். ஒரு நண்பர் மட்டும் இதனை பொதுவாகவும் சொல்லுங்கள் யாராவது ஒருவர் மட்டுமாவது கலந்துக்கொள்வார்கள் என்று சொன்னார்.

இதில் ஒருவர் இணைந்தால் மாதந்தோறும் அவர்களுக்கு என்று ஒரு நாளில் பூஜை செய்யப்படும். பூஜை செய்யப்படுகின்ற நாளில் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்களின் வேண்டுதல் என்ன என்று கேட்கப்பட்டு பூஜை செய்யப்படும்.

அதிகப்பட்சமான நல்ல நாள்கள்  பிறர் மதத்தினருக்கு சென்றுவிட்டது. மீதி இருக்கும் நாட்கள் மட்டுமே புதியதாக வரும் நபர்களுக்கு ஒதுக்கப்படும். கண்டிப்பாக நல்ல பலனை இதில் எதிர்பார்க்கலாம். கட்டணம் என்பது முழுவருடத்திற்க்கும் முதலிலேயே செலுத்தப்படவேண்டும்.

வெளிநாடுகளில் உள்ள நண்பர்கள் அதிகமாக பங்குபெறும் பூஜை இது. இதனை தற்பொழுது இந்தியாவில் உள்ளவர்களும் விருப்புவதால் பதிவில் சொல்லியுள்ளேன். விருப்பம் இருப்பவர்கள் இதில் இணைந்துக்கொள்ளலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: